Sunday, 25 April 2010

மெரீனாவை குலுக்கிய ஐமுக மாணவரணி சந்திப்பு!

 

25.04.2010 நேற்று மாலை சென்னை கடற்கரை அரங்கத்தில் நடந்த மாணவரணி சந்திப்பின் போது அங்கே சுமார் 1 லட்சம் பேர் திரண்டிருந்தனர், இன்னும் நமது கழகத்தில் அடிப்படை உறுப்பினர் அட்டை வாங்காத பல்லாயிரம் மாணவர்கள் அங்கே நமது ஐடியா கழகத்தால் ஏற்பாடு செய்யப்படாத மிட்டாய்க்கடை, ஐஸ்கிரீம் கடை, துப்பாக்கி சுடும் கடை, பஜ்ஜி போண்டா கடை மற்றும் கடலலையில் கால் நனைத்த வண்ணம் சந்திப்பில் கலந்து கொண்டனர். அவர்கள் போண்டா, பேல்பூரி, பஞ்சுமுட்டாய்  தின்கிறார்களா, அல்லது கூட்டத்துக்கு வந்தார்களா என்பதை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் டென்சனாகிக்கொண்டேயிருதார்கள்!

கூட்டத்தில் முதலாவதாக வந்த மாணவரணியின் துணைத்தலைவர் ஷாகித் கர்ணா பானிபூரி கேட்டபோது மெரினாவே திரண்டெழுந்து வந்து ஒரு பிளேட் 10ரூவாய்க்கு கொடுத்தனர். நமது கழகத்தின் வளர்ச்சியை கண்டு நாம் மெய் சிலிர்த்துப்போனோம். அதை தொடர்ந்து பல மாணவரணி செயல்வீரர்கள் பட்டம் விட்ட பேரணியில் நமது நீலகிரி பகுதி மாணவரணி செvarsha 005யலாளராக அந்த மாபெரும் பேரணியை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோகித் ஆதித்யா தலைமையேற்றார். தூர்தர்ஷன் தொடங்கி, சன் டிவி, ராஜ் டிவி, ஸ்டார், பிபிசி என யாருமே  கவர் செய்யவில்லை என்பது ஆளும் திமுக  அரசு நம் ஐமுகவின் வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கிறது என அப்போது அங்கே தோன்றிய மாணவரணித் தலைவி பப்பு தெரிவித்தார்.

பிறகு நடந்த பலூனை துப்பாக்கியால் சுடும் போட்டியில் நீலகிரிப்புலி ரோகித் ஆதித்யா எட்டுக்கு ஏழு பலூன் சுட்டார். குறிப்பாக அவர் துப்பாக்கியை கையில் சும்மா வைத்திருந்த போதே அவரின் வீரதீரத்தை தாங்காது (வெயில் சூட்டுக்கு) பலூன்கள் வெடித்தது ஒரு அருபெரும் புதிய உலக சாதனை என்று உள்ளூர் கின்னஸ் ஆபிஸ் தெரிவிக்கிறது.

உலகத்தில் முதன்முதலாக அந்த டப்பாதுப்பாக்கியில் குறிபார்ப்பது ஒருவர், லிவரை இழுத்து சுடுவது ஒருவர் என்கிற புதிய முறையை ஷாகித் உருவாக்கினார் என்பது நம்மை பெருமைப்படும் விஷயமாகும், அதுலயும் 8க்கு 4பலூன் வெடிச்சதால், ஷாகித்தை நமது இந்திய ராணுவத்துக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கவேண்டும் என்று ஷாகித் கடற்கரையில் வாங்கிய 30ரூவாய் பிளாஸ்டிக் மொபைலில் விளித்த நம் பாரத பிரதமர் மன்றாடி கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே அடுத்து வரும் தேர்தல் கூட்டணி பற்றி கலந்துரையாடசெல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்ற நமது பெங்களூரு அமைப்பாளர் முரளிதரன் ஏன் கோபாலபுரமோ போயஸ்கார்டனோ செல்லாமல் சேப்பாக்கம் சென்றார் என்பதன் பின்னணி அறியாத உளவுத்துறை போலிசார் குளம்பினர், இரவில் டுயூடி ரிப்போர்டிங்கின் போது அவர்களுக்கு ஆளுக்கொரு கொட்டுக்காய் கிடைத்தது என்று ஏஜன்சி செய்தீகள் தெரிவிக்கின்றன!. முரளிதரனின் இந்த சாமர்த்திய செயலை பாராட்டிய நமது தலைமை விரைவில் அவரை நமது தலைமைக்கழகத்தில் ஒரு சிறப்புப் பணியில் அமர்த்தும் என்று ஆஸ்திரேலிய பத்திரிக்கை ஏபிசிடிஇஎப்ஜிஹெச் தெஇரிவிக்கிறது.

பிறகு கடற்கரை அலையில் நடந்த தீவிர கலந்துரையாடலில் மாணவரணி அமைப்பாளர் வர்ஷா நமது ஆபிஸ்பாய் தங்கமணிபிரபுவை பார்த்து “இந்த கடலை தாண்டி நீங்க போயிருக்கீங்களா?” என்று கேட்ட கேள்விக்கு நம்மவர் முழித்த முழி இந்த சந்திப்பின் ஹைலைட் என்பது முக்கியமானது. அப்போது அங்கே கூடியிருந்த கழக மாணவரணியினரின் ஆர்ப்பரிப்பு கடலலையின் சப்த்த்தை விஞ்சியது.

எப்படி தன் மேல் விழுந்த ஆப்பிளால் நியுட்டன் புவியீர்ப்பு விசை பற்றி கண்டுபிடித்தாரோ அதே போல் ஒரு வரலாற்று புகழ் பெற்ற நிகழ்ச்சியால் நமது ஐமுகவின் புகழ் இந்த தரணியெங்கும் பொங்கிப்பெருகியது என்றால் அது மிகையாகாது. அதாவது  கடல் அலையில் குட்லிக்கரணம் அடித்து புரண்டெழுந்த நமது மாணவரணி துணைத்தலைவர் ஷாகித் “கிய்ய்ய்ய்ய்ய்…. கடல் தண்ணி ஃபுல்லா உப்பு!” என்று சொன்னதை உளவு சேட்டிலைட் மூலம் அறிந்த அமெரிக்க வின்வெளி நிறுவணமான நாசாவை சேர்ந்த அதிகாரிகள் பர்மிஷன் போட்டுவிட்டு அடுத்த பஸ்ஸில் கிளம்பி மெரினா நோக்கி புறப்பட்டனர். இந்த கண்டுபிடிப்பால் நமது கழகககண்மணி ஷாகித்துக்கு வரும் வருடத்தில் அறிவியலுக்கான நோபல் பரிசு கொடுக்கப்படவேண்டும் என லண்டன் டிரிபுயுனல் பத்திரிக்கை அடித்து சொல்கிறது. இதை கேள்விப்பட்ட ஒபாமா, பில்கேட்ஸ் போன்றோர் அவரவர் ஊர் கடலில் ரெண்டு சொம்பு கடல்தணி குடித்து மகிழ்ந்தனர் என்று நியுயார்க் டைம்ஸ் தெரிவிக்கிறது!

அலையில் புரண்ட மாணவரணிக் கண்மணிகளை மேலே இழுத்து வருவதற்குள் தாவு தீர்ந்துவிட்டபடியால் கலந்துரையாடலை முடித்துக்கொண்டு நாம் உணவுப்பகுதிக்கு சென்றோம்.

கடைசியாக நடந்த விருந்தில் நமது மகளிரணி தலைவி வாங்கிக் கொடுத்த சுட்ட மக்காசோளத்தை பப்பு நிராகரித்தார். ஷாகித் & ரோகித் கணக்கில் ஒரு கசட்டா ஐஸ்கிரிம் மற்றும் ஒரு பணி பூரி, பப்பு வகையில் கிடைத்த பானிபூரி என எதற்காவது யாராவது கணக்கு கேட்டால் கழகத்தின் கொள்கைக்காக உயிரைவிடவும் தயார் என ஆபிஸ்பாய் தங்கமணி பிரபு தெரிவித்துள்ளார்.

நமது ஐடியா கழக கண்மணிகள் தானுவும் மதிவதனியும் ஐபிஎல் லலித் மோடி மெய்யாலுமே மருத்துவமணையில் அணுமதிக்கப்பட்டுள்ளாரா அல்லது ”ஐயாம் சஃபரிங் ப்ரம் பீவர், ப்ளீஸ் கிராண்ட் மீ டூ டேய்ஸ் லீவு” என டூமாக்கோழி வேலை செய்கிறாரா என்பதை தெரிந்து கொள்ள டெல்லி சென்றூவிட்டபடியால் அவர்களால் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை.

ஐடியா கழக மாணவரணி சந்திப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மாணங்கள்

  • ஐமுக மாணவரணிக்கு தனி வலைப்பூ வேண்டும். மாணவரணி வீரதீர பராக்கிரமங்களை விளக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் கட்டுரைகள் அதில் நிரப்பப்படவேண்டும்.
  • வாரத்தில் ஒரு நாள் மெரினாவில் மொத்த பெரிசுகளையும் காந்தி சிலையோடு நிறுத்திவிட்டு கடற்கரை மணலில் 3லிருந்து 15 வயதுக்குள் இருக்கும் மாணவர்களை மட்டும் அனுமதிக்கவேண்டும்
  • சத்துனவு, முட்டை மாதிரி வகுப்பரையில் கார்டூன் டிவிகள் அனுமதிக்கப்படவேண்டும்
  • மாணவர்கள் பார்க்க விரும்பும் திரைப்படங்களுக்கு அவர்களை தனியாக வீடு முதல் தியேட்ட்ர் பிறகு தியேட்டர் முதல் வீடு என காவல்துறை பந்தோபஸ்தோடு அழைத்து சென்று வரவேண்டும்
  • 15வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தியேட்டரில் டிக்கட் ரத்து செய்யப்படவேண்டும்
  • ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் எழுதும் பர்ட்சையை அவர்களுடைய டீச்சர்களும் எழுதவேண்டும்.
  •  
  • டீச்சர்களின் பரிட்சைத்தாள்களை மாணவர்கள் திருத்தி போடும் மார்க்குகளை வைத்து சம்பந்தப்பட்ட டீச்சரின் வேலை நிரந்தரத்தை முடிவு செய்யவேண்டும்

மேலும் விபரங்களுக்கு நமது ஐடியா டிவியைப்பாருங்கள்!

(குறீப்பு: நமது ஐமுக அறிவியல் பிரிவு  தமிழில் முதல் முறையாக நியுமராலஜியை கொண்டுவரும் தீவிர ஆராய்ச்சியில் இருப்பதால், நமது ப்ளாக்கில் படிக்குபோது தங்களுடையா சராசரி தமிழறிவை வைத்து வல்லினம், மெல்லினம் என்கிற பழைய முறைகளை தவிர்த்துவிட்டு ”வாழ்கையில் வசந்தத்தை ஏற்படுத்தும் ஐடியா தமிழ்” என்பதை புரிந்து படிக்கவும். இதே முறையை  எழுத்துகளில் பின்பற்றி 3 மாதததில் கோடீஸ்வரர்கள் ஆன நமது ஐடியா கழக உறுப்பினர்களை விரைவில் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். நமது இதழில் எழுத்துப்பிழை என்கிறவர்கள் தெய்வ குத்தத்துக்கு ஆளாகிறார்கள். பிறகு அதை நிவர்த்தி செய்ய அலகு குத்தி சென்னை வரை பாத யாத்திரை வரவேண்டியிருக்கும். அலகை எங்கே குத்துவது என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும்)

(கூடுதல் குறிப்பு: நாலு பக்கமும் சுவரைக்கட்டிவிட்டு கூரைவழியாக வீட்டுக்குள் செல்லும் ஐஸ்வர்யம் அள்ளித்தரும் ஆகாயம் பார்த்த வீடுகள் எனும் ஐடியா வாஸ்து நமது நிபுணார்களின் ஆராய்ச்சியில் உள்ளது. வரும் 2012 உலக மக்கள் அணைவரும் அவனவன் வீட்டு ஓட்டைப்பிரித்து கூரை வழியாக உள்ளே செல்லும் அற்புத வாஸ்து புழக்கத்தில் வரப்போகிறது என்பது ஐடியா கழகத்தின் தனிப்பெருமை!)

4 comments:

இராகவன் நைஜிரியா said...

மாணவரணி கும்மாளம் அடிக்கும் போது நான் கும்மி அடிக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இங்கு ஓட்டு மட்டும் போட்டுவிட்டு மீ த எஸ்கேப்பூ...

(பர்சை பாதுகாத்துக்கணும் இல்ல... அதான்..)

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Sadagopal Muralidharan said...

இப்படி என்னுடைய இரகசிய சந்திப்பை அம்பலப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன். அடுத்தமுறை பொதுக்குழு கூடும்போது மாலத்தீவுக்கு ஓய்வெடுக்கச்சென்றுவிடுவேன் என்பதை இந்த மன்றத்தில் பதிவுசெய்யக்கடமைப்பட்டுள்ளேன்.

Anonymous said...

//ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் எழுதும் பர்ட்சையை அவர்களுடைய டீச்சர்களும் எழுதவேண்டும்.//

டீச்சர்கள் வாங்கும் மார்க்கை மாணவர்களின்
rank card-ல் இட வேண்டும்...

good idea i will become a doctor.MBBS..
:))

Post a Comment

ஐடியா கழகம் உங்களுக்கு தேவையான ஐடியாக்களை அளிப்பது மட்டுமின்றி, உங்கள் மேலான ஐடியாக்களை பெரும் மரியாதையுடன் ஏற்பதை நமது கழக தீர்மானம் ஷரத்து 11ஏ தெளிவாக சொல்கிறது! எனவே உங்கள் கருத்தை, ஐடியாவை இந்த மாபெரும் சபையில் பார்வைக்கு வையுங்கள்! வருங்கால இந்தியாவுக்கு, ஆசியாவுக்கு ஏன் வருங்கால உலகத்துக்கே நம்மை விட்டால் கதி ஒன்றுமில்லை! வாருங்கள் ஐடியாக்களை அள்ளி விடுங்கள்