Saturday, 17 April 2010

காணாமல் போனோர்… ஓர் அறிவிப்பு…….வதந்திகளை நம்பாதீர்….

அன்புடையீர்,

நிகழும் விரோதி ஆண்டு, சித்திரைத்திங்கள், 4-ஆம் தேதி…த.நா.ஐ.மு. கழக அதிகாரபூர்வ அறிவிப்பின் படி கீழ்கண்டோர் காணாமல் போயுள்ளனர்.

கழகத்தை ஐடியா சுரங்கத்திலிருந்து வெட்டியெடுத்த சொக்கத்தங்கமாம்….. திருவாளர். தங்கமணிபிரபு (சுரங்கத்தில் மதிக்கமுடியா வைரம் இருந்ததால் தலைமறைவானாரா?)

கோவை கொள்கைச்சிங்கம், கொங்குநாட்டு கிளி, ஐடியாகிளி – கழகக்கொள்கைப் பத்திரிக்கையின் நிறுவனர்….திருமதி. மயில் (பத்திரிக்கை அச்சடிக்கப்போவதாக சொன்னவர் திரும்பவில்லையா?)

நைஜீரியப்போர்வாள், போர்முரசு – திரு நைஜீரியா இராகவன்  (ஒபாமாவையும், ஒசாமாவையும் சேர்த்துவைக்கப்போய்விட்டு வரவில்லையா?)

கூட்டணிபற்றி முடிவெடுக்கும் அதிகாரமுள்ள, இளைஞரணி தேர்தலை மேற்பார்வையிடும் சஞ்ஜய் காந்தி (ராகுலுடன் இணைந்து “மால்டா’ வில் நடக்கும் இளைஞரணி தேர்தலை மேற்பார்வையிட சென்றபோது ஏற்பட்ட வேட்டி கிழிசலில்…..)

பாலாசி (அவர் எழுதிய எண்ணங்களை பிரதியெடுத்துக்கொண்டு நமது இலக்கிய அணியுடன் இணைந்து “பப்புவா-நியு-கினியா” சென்று நிகழ்ச்சி நடத்தும்போது ஏற்பட்ட கொள்கை மோதலில்….)

மேலும், எல்கே, சந்தனமுல்லை, பழனி சுரேஷ் போன்ற கழக முன்னோடிகள் காணாமல் போயுள்ளனர் என்பதை ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்படி நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும், வார இதழ்களிலும், வானொலியிலும், வாய்வழியாகவும், காற்றுவழியாகவும் வரும் செய்திகளை நம்பவேண்டாம் என்று பெங்களூரிலிருந்து கேட்டுக்கொள்கிறோம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும், நமது கழகத்தொலைக்காட்சியில் இன்று இரவு சரியாக நள்ளிரவு 12:00 மணியளவில் இணைந்து தோன்றி வந்த செய்திகள் வதந்தி என்பதை உறுதிப்படுத்துவார்கள். இது விடியோ கான்பெரன்ஸ் நிகழ்ச்சி. மேலும் இது உலக நாடுகள் எஙும் நேரடி ஒலி,ஒளிபரப்பப்படுகிறது. கழகக்கண்மணிகள் கேள்வி கேட்கலாம்.

முக்கிய செய்தி: நிகழ்ச்சிக்கு முன்னும், பின்னும் அழகான நாட்டியம்: நமது கனவுக்கன்னி – சி.ஐ.டி – சகுந்தலா. கனவுக்கண்ணன் – சுகுமார். காணத்தவறாதீர்.

வதந்திகளை நம்பாதீர். (பின்னூட்டத்துக்கு விடையளிக்கவில்லை, ஓட்டுப்போடவில்லையென்றால் காணாமல் போய்விட்டதாக அர்த்தமாகாது. இந்தப்பதிவுக்குப்பார் தமிழினமே….எத்தனை ஓட்டுக்கள்… எத்த்னை பின்னூட்டங்கள்)

தமிழினமே…..எதிரிகளின் வாய் மூட, ஊடகங்களின் மமதையைக்கொளுத்த வீறு கொண்டு போடு உன் ஓட்டை தமிழிஷ்-லும், தமிழ்மனத்திலும்.

ஐடியா கழகக்கண்மணிகளே…..நம் ஆட்சிவந்துவிடும் என்ற பயத்தில் எதிர்கட்சிகள் செய்யும் இந்தக்கோமாளித்தனத்தைத் தோல் உரிக்க வரிசையாய் இடு உன் பின்னூட்டங்களை..

 

வாழ்க ஐடியா!  வளர்க ஐடியா!!

18 comments:

LK said...

//மேலும், எல்கே, சந்தனமுல்லை, பழனி சுரேஷ் போன்ற கழக முன்னோடிகள் காணாமல் போயுள்ளனர் என்பதை ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.//
nan ingathanunga irukken. ethuvum post varaliyenu waiting

Sadagopal Muralidharan said...

//LK said...
//மேலும், எல்கே, சந்தனமுல்லை, பழனி சுரேஷ் போன்ற கழக முன்னோடிகள் காணாமல் போயுள்ளனர் என்பதை ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.//
nan ingathanunga irukken. ethuvum post varaliyenu waiting//

கழகத்தின் வெற்றிக்கு முதல் வித்திட்ட கண்மணியே, உங்களைப்பொன்ற உண்மையான தொண்டர்கள் உள்ளவரை த.நா,ஐ.மு.க கோட்டையைப்ப்பிடிப்பது உறுதி. அதுவும் பதிவிட்ட ஒரு நிமிடத்திற்குள் பின்னூட்டம் இட்ட வேகம் மிகவும் பாராட்டப்படக்கூடியது.

சொல்வதும் ஐடியா! செய்வதும் ஐடியா!!

இராகவன் நைஜிரியா said...

வணக்கம்... வந்தனம்... நமோஸ்கார்...

யப்பே விட்டா ஆளே போயிட்டாருன்னு சொல்வாங்கப்பா... பார்த்து நாமதான் சூதனமா இருந்துக்கணும்...

அண்ணன் முரளி, அக்கா மயில், அண்ணன் தங்கமணி பிரபு என மூன்று ஆபிஸ் பாயா இருந்தும்.... வாரம் ஒரு இடுகை என மாறியதன் மர்மம் என்னவோ?

இராகவன் நைஜிரியா said...

திரு சடகோபன் முரளி அவர்கள் என்ன ஆனார்?

Anonymous said...

கழக போர்வாள் சூறாவளி சுற்று பயணம் போயிருப்பதால் இன்னும் ஒரு மாததிற்கு விடுமுறை :))

Sadagopal Muralidharan said...

//இராகவன் நைஜிரியா said...
வணக்கம்... வந்தனம்... நமோஸ்கார்...

யப்பே விட்டா ஆளே போயிட்டாருன்னு சொல்வாங்கப்பா... பார்த்து நாமதான் சூதனமா இருந்துக்கணும்...

அண்ணன் முரளி, அக்கா மயில், அண்ணன் தங்கமணி பிரபு என மூன்று ஆபிஸ் பாயா இருந்தும்.... வாரம் ஒரு இடுகை என மாறியதன் மர்மம் என்னவோ?//

நன்றி போர்வாளே! போர் முரசே!!
அக்கா மயில், அண்ணன் தங்கமணிபிரபு ஆகியோர் மிகபரபரப்பாக கட்சியை வளர்க்கும்பணியில் ஈடுபட்டுள்ளதால், தமிழிஷ்-ல் அவர்கள் எழுதிய பதிவைக்கூட “சப்மிட்: செய்ய இயலவில்லை. கழகம் சார்பாக மன்னிப்பு கோரப்படுகிறது.

அண்ணன் முரளீதரன், வானம் இடிந்தாலும், பூமி பிளந்தாலும் வாரம் ஒருமுறை கண்டிப்பாக ஏதாவது ஐடியா கொடுத்துக்கொண்டே இருப்பார் என மிகத்தாழ்மையுடன்(?) தெரிவிக்கிறேன்.

Sadagopal Muralidharan said...

//இராகவன் நைஜிரியா said...
திரு சடகோபன் முரளி அவர்கள் என்ன ஆனார்?//

வாழ்க ஐடியா! வளர்க ஐடியா!!

Posted by Sadagopal Muralidharan at 12:15
மேலே பாத்துட்டுத்தேன் இந்தக்கேள்வியா? இல்லை வெணும்னுட்டேவே...சொல்லோணும்ல...அப்பத்தேன் புரியும்...

Sadagopal Muralidharan said...

//மயில் said...
கழக போர்வாள் சூறாவளி சுற்று பயணம் போயிருப்பதால் இன்னும் ஒரு மாததிற்கு விடுமுறை :))//

சொன்னாக்கேட்டாத்தானே ஆகும். சூறாவளி போயி இப்பொ ஒரிசா-வில் ஏகப்பட்ட உயிர்சேதம், பொருள்சேதம். இதுக்குவேறே தனியா கலெக்‌ஷன் செய்யனும்போல இருக்கே. பாதிக்கப்பட்டமக்களுக்கு ஒரு ஐடியா கொடுக்கோணும்ல. இனிமே இப்புடி சுற்றுப்பயணம் போறதா இருந்தா முன்கூட்டியே தகவல் சொல்லணுமாக்கும்.

ஸொல்வதும் ஐடியா! செய்வதும் ஐடியா!1

Sadagopal Muralidharan said...

ஆமாம். இதுலே யாரு ஓட்டுப்போடலே. கணக்குப்பார்த்தா - நானு + எல்கே + இராகவன் நைஜீரியா + மயில் = 4. ஆனால் பதிவாயிருப்பது 3 ஓட்டு. செல்லாத ஓட்டுப்போட்ட சொக்கத்தங்கம் யாருங்கிற உண்மை தெரிஞ்சாகணும் சாமி......

இல்லைன்னா மெல்வதும் ஐடியா! மறப்பதும் ஐடியான்னு ஆகிடும்....

க. தங்கமணி பிரபு said...

அலோ, இப்பிடியா மானத்தை வாங்குவீங்க! ஒரு பேச்சு போன்ல சொன்னா போச்சு! அத விட்டுட்டு என்னங்க நீங்க! நானு வரும் 26ஆம் தேதி முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் “முந்தானை முடிச்சு” தொடரிலும் ஆபிஸ் பாய் வேலை பார்ப்பதால், காலை முதல் இஅரவு வரை இஅடுப்பை முறிக்கிறார்கள்! மறுநாள் விடிஞ்சா வேறெத முறிக்கலாமுன்னு யோசிச்சுட்டு இருக்காங்க! முடியல......அழ ஆரம்பிச்சுட்டேன்!!

க. தங்கமணி பிரபு said...

பாருங்க, மின்னத்த பிண்ணூட்டத்துல எத்தனை ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு! ஒட்டு போடலன்னு ஒரு பொரணீ வேறயா! ஏங்க நான் இப்பதான் ஊட்டுக்கே வந்தேன்! அதுவும் நேத்து நடுராத்திரி வரைக்கும் டின் கட்டிட்டாங்க! அதான் வயிறு வலிக்குது, கண்ணு வலிக்குது, கிறு கிறுன்னு வருது, நான் வீட்டுக்கு போறேன் மிஸ்ஸுன்னு சொல்லிட்டு வந்த்தாதால விட்டாங்க! ஒட்டும் போட்டுட்டேங்க!

அலூ... அலூ...!

பங்களூர் ஆபிஸ் முதலாளியா!

இந்தாளு முரளிதரன போன வருஷம் முக்காவாசி நாளு வெளி நாட்டுக்கா அனுப்பிச்சீங்க! இந்த வருஷம் எங்கியும் அனுப்பலியா? ரொல்லு தாங்கலீங்க!!

Sadagopal Muralidharan said...

//க. தங்கமணி பிரபு said...
அலோ, இப்பிடியா மானத்தை வாங்குவீங்க! ஒரு பேச்சு போன்ல சொன்னா போச்சு! அத விட்டுட்டு என்னங்க நீங்க! நானு வரும் 26ஆம் தேதி முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் “முந்தானை முடிச்சு” தொடரிலும் ஆபிஸ் பாய் வேலை பார்ப்பதால், காலை முதல் இஅரவு வரை இஅடுப்பை முறிக்கிறார்கள்! மறுநாள் விடிஞ்சா வேறெத முறிக்கலாமுன்னு யோசிச்சுட்டு இருக்காங்க! முடியல......அழ ஆரம்பிச்சுட்டேன்!!//

நீரே முந்தானை முடிச்சுக்கு முக்கண் முதல்வராகுக. ஆபீசு பாயானாலும் குற்றம் குற்றமே!
ஓட்டுப்போடுவதும், பின்னூட்டம் எழுதுவதும் ஐடியா குலம். அதைப் போடாமலும், எழுதாமலும் இருப்பது ஒரி காலத்திலும் ஏற்க முடியாது. அதற்கு இந்தப்பாண்டிய மன்னன் முடிச்சு போடுவதை ஏற்க முடியாது. நாங்கள் ஏற்கும் இந்தத்தொடர் நிறுத்தப்படக்கூடாது...

சொல்வதும் ஐடியா! செய்வதும் ஐடியா!!

Sadagopal Muralidharan said...

//க. தங்கமணி பிரபு said...
பாருங்க, மின்னத்த பிண்ணூட்டத்துல எத்தனை ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு! ஒட்டு போடலன்னு ஒரு பொரணீ வேறயா! ஏங்க நான் இப்பதான் ஊட்டுக்கே வந்தேன்! அதுவும் நேத்து நடுராத்திரி வரைக்கும் டின் கட்டிட்டாங்க! அதான் வயிறு வலிக்குது, கண்ணு வலிக்குது, கிறு கிறுன்னு வருது, நான் வீட்டுக்கு போறேன் மிஸ்ஸுன்னு சொல்லிட்டு வந்த்தாதால விட்டாங்க! ஒட்டும் போட்டுட்டேங்க!

அலூ... அலூ...!

பங்களூர் ஆபிஸ் முதலாளியா!

இந்தாளு முரளிதரன போன வருஷம் முக்காவாசி நளு வெளி நாட்டுக்கா அனுப்பிச்சீங்க! இந்த வருஷம் எங்கியும் அனுப்பலியா? ரொல்லு தாங்கலீங்க!//

பெங்களூரு அபிஸ் முதலாளி:
நல்லவேளை நான் வெளினாட்டுக்கு அனுப்பலை. இப்பொவாவது இராத்திரி 10:00 மணிக்கு மேலெ வீட்டிலே எல்லோரும் தூங்குனதுக்கப்புறமா பதிவி எழுதுறார். வெளிநாட்டுலே சாயுங்காலம் 6:00-லேர்ந்தே ஆரம்பிச்சிருவாரு. பரவாயில்லைன்ன சொல்லுங்க. நாளைக்கே பெட்டியைக்கட்டிருவோம்.

வாழ்க ஐடியா! வளர்க ஐடியா!!

SUREஷ் (பழனியிலிருந்து) said...

உள்ளேன் ஐயா..,

நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என்பதை காட்ட மீள்பதிவுகள் இட்டுக் கொண்டே இருக்கிறேன் தல..,

வேலைப் பளு அதிகம், அவையெல்லாம் பின்னர் இடுகைகளாக வர இருக்கின்றன..,

தாரணி பிரியா said...

//இன்று இரவு சரியாக நள்ளிரவு 12:00 மணியளவில் இணைந்து தோன்றி வந்த செய்திகள் //

எல்லாரும் என்ன பேய்களா இந்த நேரத்துக்கு வர்றீங்க :)

Sadagopal Muralidharan said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
உள்ளேன் ஐயா..,

நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என்பதை காட்ட மீள்பதிவுகள் இட்டுக் கொண்டே இருக்கிறேன் தல..,

வேலைப் பளு அதிகம், அவையெல்லாம் பின்னர் இடுகைகளாக வர இருக்கின்றன..//

இதைத்தான்..இதைத்தான் எதிர்பார்த்தோம்...
கண்மணிகள் இல்லாமல் கலகமா...மன்னிச்சுக்குங்கோ.. கழகமா....

Sadagopal Muralidharan said...

//தாரணி பிரியா said...
//இன்று இரவு சரியாக நள்ளிரவு 12:00 மணியளவில் இணைந்து தோன்றி வந்த செய்திகள் //

எல்லாரும் என்ன பேய்களா இந்த நேரத்துக்கு வர்றீங்க :)//

பாம்பின் கால் பாம்பறியும்... பழமொழி நினைவுக்கு வந்தது. அம்புட்டுத்தேன்...கோச்சுக்கப்படாது...

கழகத்தொலைக்காட்சியில் மத்த எல்லா ஸ்லாட்டும் வித்தாச்சு.. கிடைச்சது இதான்..சந்தேகமா இருந்தா...கழகத்தொலைக்காட்சி உதயமானது பதிவைப்பாருங்கோ....

siva said...

hehe
:)

Post a Comment

ஐடியா கழகம் உங்களுக்கு தேவையான ஐடியாக்களை அளிப்பது மட்டுமின்றி, உங்கள் மேலான ஐடியாக்களை பெரும் மரியாதையுடன் ஏற்பதை நமது கழக தீர்மானம் ஷரத்து 11ஏ தெளிவாக சொல்கிறது! எனவே உங்கள் கருத்தை, ஐடியாவை இந்த மாபெரும் சபையில் பார்வைக்கு வையுங்கள்! வருங்கால இந்தியாவுக்கு, ஆசியாவுக்கு ஏன் வருங்கால உலகத்துக்கே நம்மை விட்டால் கதி ஒன்றுமில்லை! வாருங்கள் ஐடியாக்களை அள்ளி விடுங்கள்