Thursday, 8 April 2010

நீராவி இட்லி, நிலக்கடலை சட்னி

வா ஐடியா தமிழினமே
வீறுகொண்டு எழுந்து வா!
ஐடியா கழகத்தின்
இளம் ரத்தம்....
சக்கரவியுகம் உடைக்கும்
புதிய அபிமன்யு....!.
புரட்சியில் பகத்சிங்!
வீரத்தில் ஜான்சிரானி!
படிப்பது யுகேஜி @#$
நம் இளைஞரணி தளபதி
பப்பு பாப்பா பரிட்சை எழுதுகிறாள்
பறந்து வா ஐடியா ரத்தமே

வரப்போகிறது இறுதிப்பரிட்சை
நைஜீரியாவிலிருந்து திராட்சைகள் வரட்டும்
சித்தப்பூ கையால் பேரிடசைகள் வரட்டும்
எழுதி வாடிய கரங்களுக்கு தங்க வளை கொண்டுதரட்டும்

இனி பிறக்கிறது தேர்வு விடுமுறை
கும்கி வேலைக்கு லீவு போடட்டும்
குழந்தை கேட்கும் மிட்டய்களை கொண்டு தரட்டும்!
அவள் சிரித்தால்
உங்களுக்கு பொண் கர்ச்சீப்பு ! (அட பொண்ணாடை மாதிரிங்க)
மாறாக அழுதால்
போய்ட்டு வாங்கப்பு!


ஞாயிறுக்கு பின் திங்களும் விடுமுறை
வரும் இரு திங்களும் இதுவே முறை
பட்டர்பிளைக்கு வேறென்ன வேலை
உலகப்படக்கதைகள் சொல்லி
கிள்ளையை உறங்கப்பண்ணட்டும்!
பாப்பு உறங்கினா நீங்க மாப்பு!
மாறாக கடுப்பானால் வரும்டி ஆப்பு!

நீராவி இட்லி, நிலக்கடலை சட்னி
என ஐடியாகக்ளை உலகுக்கு அளித்த
சிங்கத்தமிழினித்தின் தங்கத்த்மிழச்சி
விக்கியே வா! வின்னைத்தாண்டி
பிள்ளைக்கு விளையாட்டு காட்டிடு!
விழுந்து விழுந்து அவள் சிரித்தால்
உமக்கு கிடைக்கும் 2 தேன் முட்டாய்!
கீழே விழுந்தவள் முட்டி சிராய்த்தால்...
விக்கீ.....(சாரி, ரைமிங்கா ஒன்னும் கிடைக்கல)


யாரு செத்தாலும் பொழைச்சாலும்
கார்த்தால் 9 மணிக்குத்தான் கண்விழிக்கும்
தியாக சொரூபம் அக்கா - 
எங்க மக்கா - மயிலக்கா
இரண்டு மாதத்துக்கு - மகளே
பப்புவிடம் பப்பு வேகாது!
அதிகாலை வாக்கிங் போவாய்
எம் பெண்புலியே!
தலைமையே தொலைபேசியில்
ராமை விளித்து
வாங்கித்தரசொல்லும்
உமக்கு பிடித்த
இடியாப்பம் பாயா!
மத்தியானம் உறங்குவாயானால்
உனக்கு கிடைக்காது
ராம் வழக்கமாக போடும் சாயா!!!

தேர்தல்
விண்ணப்பம் விற்ற காசில்
பெங்களுரூவில்
ஆப்பிளும் திராட்சையும்
வகைக்கு 20 கிலோ
வாங்கி வாரும் முரளீதரா
தலைமைக்கழகம் - உமக்கு
வரிவிலக்களிக்கும்!
ஊட்டிக்கு போய்ட்டேன்
ஊருக்கு போய்ட்டேன்னு
காரணம் சொல்லிப்பாருங்க..
மவனே
தலைமை உம்மிடம் 
கணக்கு கேட்கும்!
கணக்கு ஒரு மண்ணும் கூடத்
தெரியாத தலைமையிடம்
மைனஸ் ப்ளஸ் சொல்லியே
தாவு தீர்ந்து போகும்!

சஞ்சய் காந்தி......
வாரமிருமுறை
மைசூர்பாக்கு ஐஸ்கிரீமுடன்
பப்புவுக்கு கொணர்ந்து தரூவீர்
காரா மற்றும் இனிப்பு பூந்தி!
இடையில் அவங்கம்மா
ஆட்டையை போடாமல்
பூந்தியை காத்திடுவீர் 
எமதருமை காந்தி!

சந்தனமுல்லை, பாலாசி
தங்கமணிபிரபு, எல்கே
உண்மைத்தமிழன்
பழனி சுரேஷ் யாவருக்கும்
கண்ணான வேலையுண்டு!
பப்புவுடன் சேர்த்து
விடுமுறை காணும்
ஐடியா கழகத்தின்
அணைத்து  எல்கேஜி யுகேஜி
மாணவரணி மான்களுக்கும்
காவல் காப்புடன்
நொண்டி, பல்லாங்குழி
கில்லி, சிட்லி
கிளியோர்(க்)கிளி (க் - இங்கே சைலண்ட்)
என அவர்கள் சொல்லும் ஆட்டங்களை
ஆடிக்காட்டுவீர்
வன்முறை புரட்சி என த்வறாக புரிந்துகொண்டு
காவல்துறை உம்மை கைதுசெய்யுமாயின்
சிறை நிரப்புவாய் கண்மணி!
உங்களுக்கு சோறு போட்டே
காலியாயிடும் கஜானா!
மரியாதையா ரிலிஸ் பண்ணிடுவாங்க
வந்து மறுபடி விளையாடுங்க!

வா பப்பு தலைமையேற்ற
மாணவரணி சிங்ககுட்டிகளே
ஐடியா கழகம் 2 மாசத்துக்கு
உங்களுக்கு சேவை செய்யும்!
ஏனென்றால்...........
வேற வழி!@#$%

சொன்னதும் ஐடியா! செய்வதும் ஐடியா!!

21 comments:

Anonymous said...

யாரு செத்தாலும் பொழைச்சாலும்
கார்த்தால் 9 மணிக்குத்தான் கண்விழிக்கும்
தியாக சொரூபம் அக்கா -
எங்க மக்கா - மயிலக்கா//

அண்ணே இதெல்லாம் உண்மைதான் ஆனாலும் பப்ளிக் பப்ளிக் :))

Anonymous said...

பட்டர்பிளைக்கு வேறென்ன வேலை
உலகப்படக்கதைகள் சொல்லி..
உங்களுக்கு பட்டர்ப்ளை மேல என்ன கடுப்பு இப்படி சிக்க விட்டுடீங்க, பப்பு தர பல்புக்கு அளவே இருக்காது :)))))

Anonymous said...

சஞ்சய் காந்தி......
வாரமிருமுறை
மைசூர்பாக்கு ஐஸ்கிரீமுடன்
பப்புவுக்கு கொணர்ந்து தரூவீர்
காரா மற்றும் இனிப்பு பூந்தி!
இடையில் அவங்கம்மா
ஆட்டையை போடாமல்//

அத்தோடு பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் வாங்கித்தர உத்தரவு போடவும் :))

Anonymous said...

சந்தனமுல்லை, பாலாசி
தங்கமணிபிரபு, எல்கே
உண்மைத்தமிழன்
பழனி சுரேஷ் யாவருக்கும்//

கார்த்திக் ஹிஹிஹிஹி என்ன வெளையாட்டு தெரியும் :))

உண்மைத்தமிழன் சித்தப்பூ.. வெளையாட்டு ஒரு நாள்ள மு்டிஞ்சிடனு்ம் அதான் கண்டிசன் :))

தமிழய்யா said...

//சஞ்சய் காந்தி......
வாரமிருமுறை//

சாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக், சஞ்சய் கந்தி என்பதுதான் சரி

இராகவன் நைஜிரியா said...

// வரப்போகிறது இறுதிப்பரிட்சை
நைஜீரியாவிலிருந்து திராட்சைகள் வரட்டும்
சித்தப்பூ கையால் பேரிடசைகள் வரட்டும்
எழுதி வாடிய கரங்களுக்கு தங்க வளை கொண்டுதரட்டும் //

திராட்சை சரி... பேரீட்சையும் சரி... தங்க வளையல்களா???

இராகவன் நைஜிரியா said...

// பட்டர்பிளைக்கு வேறென்ன வேலை
உலகப்படக்கதைகள் சொல்லி
கிள்ளையை உறங்கப்பண்ணட்டும்! //

குழந்தைகளை ஏன் பயமுறுத்தனும் ... உலகப் பட கதைகளா... அவ்....அவ்....

இராகவன் நைஜிரியா said...

// நீராவி இட்லி, நிலக்கடலை சட்னி
என ஐடியாகக்ளை உலகுக்கு அளித்த
சிங்கத்தமிழினித்தின் தங்கத்த்மிழச்சி
விக்கியே வா! //

தங்கத் தமிழச்சியின் புகழுக்கு கலங்கம்.... எவ்வளவோ கண்டு பிடிச்சு இருக்காங்க... சொல்லியிருக்காங்க... அதையெல்லாம் விட்டுடீங்களே...

இது கொஞ்சம் கூட சரியில்லை..

இராகவன் நைஜிரியா said...

// வின்னைத்தாண்டி
பிள்ளைக்கு விளையாட்டு காட்டிடு!
விழுந்து விழுந்து அவள் சிரித்தால்
உமக்கு கிடைக்கும் 2 தேன் முட்டாய்! //

விழுந்து விழுந்து சிரிக்கும் போது அடி படாது... :-)

இராகவன் நைஜிரியா said...

// யாரு செத்தாலும் பொழைச்சாலும்
கார்த்தால் 9 மணிக்குத்தான் கண்விழிக்கும்
தியாக சொரூபம் அக்கா -
எங்க மக்கா - மயிலக்கா //

விடியற்காலை 9 மணிக்கு கண்விழிக்கும் மயிலக்கா..

இராகவன் நைஜிரியா said...

// அதிகாலை வாக்கிங் போவாய்
எம் பெண்புலியே! //

அய்யோ... அய்யோ... பொய் சொல்வதெற்கும் ஒரு அளவு கிடையாதா...

சூரியோதயம் எப்படி இருக்குன்னு விஜி மயிலக்காவுக்குத் தெரியுமா?

இராகவன் நைஜிரியா said...

// மத்தியானம் உறங்குவாயானால்
உனக்கு கிடைக்காது
ராம் வழக்கமாக போடும் சாயா!!!//

பாவம் ராம்... சாயா கொடுக்கலைன்னா அவர் பாயா ஆயிடுவாருங்க... ஆண் பாவம் பொல்லாது..

இராகவன் நைஜிரியா said...

// தேர்தல்
விண்ணப்பம் விற்ற காசில்
பெங்களுரூவில்
ஆப்பிளும் திராட்சையும்
வகைக்கு 20 கிலோ
வாங்கி வாரும் முரளீதரா //

வந்த காசில் நீங்க வாங்கி வரச் சொன்னது 0.000001% கூட வராது. இதுக்கு இவர் வரணுமா? வெட்கம்... வெட்கம்.... கேட்கறது கேட்கறீங்க... கூட வேறா எதாவது சேர்த்துக் கேட்க கூடாது..

ஒன்னும் வாங்கதவனை தங்க வளையில் வாங்கி வரணும்னு சொல்லுங்க...

எல்லாம் வாங்கியவரை... ???

காலத்தின் கோலம்...

இராகவன் நைஜிரியா said...

// அத்தோடு பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் வாங்கித்தர உத்தரவு போடவும் :)) //

பட்டர் உங்களுக்கு
ஐஸ்கீரிம் பப்புவுக்கு
ஸ்காட்ச் யாருக்கு??

அளவில்லா ஆர்வம் மற்றும் சந்தேகத்துடன்.

இராகவன் நைஜிரியா said...

// தமிழய்யா said...
//சஞ்சய் காந்தி......
வாரமிருமுறை//

சாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக், சஞ்சய் கந்தி என்பதுதான் சரி //

ஹலோ யாருப்பா அது எங்க வருங்கால முதல்வர் காலை ஒடிக்கிறது...

LK said...

//சந்தனமுல்லை, பாலாசி
தங்கமணிபிரபு, எல்கே
உண்மைத்தமிழன்
பழனி சுரேஷ் யாவருக்கும்
கண்ணான வேலையுண்டு!/
வந்து போக பயணப்படி எல்லாம் கொடுக்கணும் இப்பவே சொல்லிபுட்டேன் .

(விரைவில் கோவை விஜயம் உண்டு)

cheena (சீனா) said...

தாங்க முடிலப்பா - பப்பு தேர்வினில் வெற்றி பெற நல்வாழ்த்துகள் - வெற்றி விழா ஏற்பாடுகள் துவங்கட்டும். உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் தொடரட்டும். அனைத்துக் கிளைக்கழக பொறுப்பாளர்களும் உடனடியாக பணத்துக்கு ஏற்பாடு செய்யாடும் - நன்கொடைகள் குவிய வேண்டும். ஆமா சொல்லிப்புட்டேன்

*இயற்கை ராஜி* said...

:-)

புதுகைத் தென்றல் said...

:)

Sadagopal Muralidharan said...

தலைமைக்கழகம் என்று தலைமைக்கலகம் ஆனது. நமது மழலையர் அணியில் இடம்பெற்றுள்ள பப்புவின் படிப்பைச்சாக்காக வைத்து கணக்குக்கேட்பதா?

வர்றேன் அடுத்த வாரம் சென்னை. வெக்கறேன் அப்போ...தனியா..................

ஏமாந்திங்களா??? கணக்கு நோட்டு சரிபார்க்க...

வாழ்க ஐடியா! வளர்க ஐடியா!!

செல்வேந்திரன் said...

@ விஜி:

நேத்திக்கு பப்புவுக்கு ஆன் டிரைவ், கவர் டிரைவ் ஷாட்டெல்லாம் அடிக்கச் சொல்லிக் கொடுத்தேன். எனக்கும் ரெண்டு பால் போடுடீன்னு சொன்னா மட்டையாலே அடிக்க வர்றா... தாயப் போல புள்ள...:))

Post a Comment

ஐடியா கழகம் உங்களுக்கு தேவையான ஐடியாக்களை அளிப்பது மட்டுமின்றி, உங்கள் மேலான ஐடியாக்களை பெரும் மரியாதையுடன் ஏற்பதை நமது கழக தீர்மானம் ஷரத்து 11ஏ தெளிவாக சொல்கிறது! எனவே உங்கள் கருத்தை, ஐடியாவை இந்த மாபெரும் சபையில் பார்வைக்கு வையுங்கள்! வருங்கால இந்தியாவுக்கு, ஆசியாவுக்கு ஏன் வருங்கால உலகத்துக்கே நம்மை விட்டால் கதி ஒன்றுமில்லை! வாருங்கள் ஐடியாக்களை அள்ளி விடுங்கள்