Tuesday, 6 April 2010

கழகத்தொலைக்காட்சி உதயமானது

SwordSunriseIdentity

நமது கழகத்தின் தொ(ல்)லைக்காட்சி பெங்களூருவிலிருந்து உலகளாவிய கொள்கைபரப்புச்செயலுக்காக கடந்த மார்ச் திங்கள் மதிநிறைந்த நன்னாளில் வணக்கம் உலகம் நிகழ்ச்சியுடன் தமிழ்ஞாயிறு, இந்திய சூரியன், உச்சவின்மீன், உலகசூறாவளி - ஆகியோர் முன்னிலையில் பட்டாசு கொளுத்திப்போட்டு, (கட்டப்பஞ்சயத்து செஞ்சு மிரட்டி கூட்டிட்டுவந்ததா சொன்னதை நம்ப்பாதே தமிழினமே)தங்கு தடையின்றி நேரடி ஒளிபரப்பு சிறப்பே நடைபெற்றது என்பதை என் ரத்தத்தின் ரத்தங்களான, உடன்பிறப்புகளுக்கும், உயிரிலும் மேலான ரசிகர்களுக்கும், தோழர்கள்க்கும், இனமான பார்வையாளர்களுக்கும் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

நமது தொலைக்காட்சியின் நிகழ்ச்சி நிரல்:

04:00 மணி: எழுப்புக்குத்து:

clip_image002

நல்ல கருத்துக(கள்) நிறைந்த கும்மாங்குத்துப்பாடல்கள். பள்ளி செல்லவும், சமையல் செய்யவும், அலுவலகம் செல்லவும் காலை எழும்போதே கிளர்ச்சியூட்டும் மன்னிக்கவும் புத்துணர்ச்சியூட்டும் பாடல்கள்.

05:00 மணி: இன்றைய, நேற்றைய மற்றும் நாளைய பலன்கள்

clip_image004

நேத்து உருப்படாத நாளாயிருந்தது, இன்று உருப்படும்னு தப்புக்கணக்குப்போட்டா நாளைக்குக் கண்டிப்பா உருப்படாது. பரிகாரத்துக்கு தினமும் நாலு தடவை ஆலமரத்துக்குப்பக்கத்துலெ இருக்கற அரசமரத்துக்கு அந்தப்பக்கமா இருக்கற எம்ப்ளாய்மெண்ட் எக்சேன்ஞ் போய் வரிசையிலெ நிக்கணும். (எத்தனை யுகம்னு கேக்கப்படாது!)

06:00 மணி: வணக்கம் உலகம்:

clip_image006

த.நா.ஐ.மு.க-வைப்பற்றி பெருமையாக பேசக்கூடிய, கழகத்திற்காக குரல் கொடுத்த, தமிழ், தமிழ்-னு மாரடிக்கிற கோயம்பத்தூரு கோயிந்து, அவினாசி அய்யனாரு, கலக்கல் கானா கந்தசாமி, டெல்லிமுள் தினேசு, அருவாள் ஆறுமுகம் போன்ற நல்லோர்கள், சான்றோர்களிடம் கலந்துரையாடுபவர் நேத்துப்பொறந்த B.D, C.D, F.D. (இவர்கள் அனைவரும் தொகுப்பாளினிகளின் சங்கத்தலைவர்கள் ஆவார்கள்)

07:00 மணி: சண்டைபோடுவது எப்படி (தற்காப்புக்க்கலைன்னும் சொல்வாங்க)

clip_image008

உலகப்புகழ்பெற்ற பட்டாக்கத்தி பைரவன் கற்பிக்கும் கலைகள். சொல்லித்தரப்படுபவை:.

வீட்டுக்காக:

அட்டைக்கத்திசண்டை, பேனாக்கத்தி ஓபனிங்.தோசைக்கரண்டி தடுத்தல். பூரிக்கட்டை தடுப்பு,

(பெண்கள் ச்பெசல்): குடுமிபிடி, குழாயடி, கிணத்தடி

நாட்டுக்காக:

மைக் பிடுங்குதல், உருட்டுக்கட்டை பிடித்தல், சுமோ ஓட்டுதல், போச்டர் கிழித்தல், சிலை உடைத்தல், மரம் வெட்டுதல், ஹெலிகாப்டர் முன்னால் தரையில் விழுந்து வணங்குதல், காரிலும் ஜீப்பிலும் தொங்குதல்

08:00 மணி: இறைவனின் நேரம்

clip_image009

உலகெங்கும் உள்ள எந்த எந்தக்கோயிலில் எத்தெனெ ரூவாயி வசூலாச்சுங்கற விவரம். அப்பொத்தானே எங்க அதிகமா உழுந்துச்சோ நாமளும் அங்க போயி போடலாம். மனம், மொழி, இனப்பாகுபாடு பார்க்காத நிகழ்ச்சி

09:00 மணியில் இருந்து 21:00 மணி வரையிலான நிகழ்ச்சிகளுக்கு கடும் போட்டி நிலவுவதால் முடிவு எடுப்பதில் சிரம்மாக உள்ளது. தொலைக்காட்சியின் பொதுக்குழுவும், செயல்குழுவும் இப்போது பாண்டிச்சேரியில் ரூம் போட்டு....என்ன்மோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

21:00 மணி: உணமை! உக்காந்த்து என்ன?

இந்த வாரம்:

மூனு பொண்டாட்டி, மூனு புருசன்..இதன் சூட்சும்ம் என்ன?

பாண்டாகரடி சென்ற மாமா குகை

ஏன் பிடிக்கிறது பேய்..

22:00 மணி: இப்படிக்கு மல்லிப்பூ....

இஞ்ஜி தின்ற குரங்குக்குப்பிடித்த பேய்...இருக்கிறதா? இல்லையா?

23:00 மணி: பொய்யல்ல மெய்...

கல்யாணம் ஆகியும் திட்டாத, அடிக்காத, மொறைக்காத, மனைவி, அதைப்பார்த்து சங்கடப்படும் கணவன்.

24:00 மணி: ஊம்..ஊம்...சொல்லமாட்டோம். நீங்களே பார்த்துக்கோங்கோ???

அனைத்துக்கழக்க்கண்மணிகளும் தங்களுடைய விருப்பத்தைக்கூறினால் தகுந்த மாற்றங்கள் செய்யப்படும்.

முக்கியமான செய்தி:

காணத்தவறாதீர்கள். உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் 1001-ம் முறையாக சின்னத்திரைக்கு வந்து சில வாரங்களே ஆன...............ரும்..................வும் நடிக்கும்.............காட்சிகள் நிறைந்த..........................................படம் ஒளிபரப்பப்படும்.

மேலும் விவரங்களுக்கு 19:30 செய்தியைக்காண்க.

கழகச்செய்திகள்:

பொதுக்குழு, செயற்குழு கூடி வாரநிகழ்ச்சியையும், மாத நிகழ்ச்சியையும், விடுமுறை தின நிகழ்ச்சிகளையும் முடிவு செய்யும் என்று தெரிகிறது.

”சென்ற ஆண்டு பூமி” நிகழ்ச்சியைத்தொகுக்க, வழங்க: நைஜீரிய போர்முரசு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

”செய்திகளை” நமது மானாட மயிலாட(மன்னிக்கவும் பழக்கதோஷம்) தானைத்தலைவி, கொங்குநாட்டுக் கொள்கைச்சிங்கம்(பெண்சிங்கம்) மயிலு க்ரியேடிவ் ஹெட்-ஆ இருந்து நடாத்த வேண்டும் என்று பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

15 comments:

மயில் said...

ராகவன் சித்தப்பூ எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் :))

Kannan said...

ok right...

இராகவன் நைஜிரியா said...

நாளு நாள் லீவு முடிஞ்சு இன்னிக்குத்தான் ஆபீஸ் வந்து இருக்கேன்..

டூ மச் ஆணீ..... வரேன்...

Sadagopal Muralidharan said...

ஓட்டுப்போடலியோ....ஓட்டு...

நேசமித்ரன் said...

ஆணிகள் அதிகம் என்று சொல்லி அண்ணன் ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

LK said...

அவ்வ்வ்வவ்வ்வ் முடியல உங்க அட்டகாசம்

ஐடியா முன்னேற்ற கழகம் said...

ச்சும்மா பின்றாருங்க முரளிதரன், அதாவது பாதிநாள் ரெம்ப பிஸியா இருக்கறதால மீதீ நாள் நம்ம கழகத்துக்கு எழுதுங்கன்னு கேட்டுகிட்டோம்! எழுத்தேல்லாம் எதுக்கு டிவி பாருங்கன்னு அவர் சொன்னதுல கலாநிதிமாறனே டென்ஷனாயிடாருங்க! விரைவில் ஐடியா பிக்சர்ஸ்னு ஒன்னு ஓப்பன் பன்னுங்க! ஐடியா கழகத்தின் வியாபாரிகள் அணியை தொடங்கவுள்ள தியாக சொரூபம் மயிலக்கா கையால குத்தி விளக்குஏத்துங்க! ஆமா ஃபுல்டைம் சும்மா இருக்கற மயிலும் எழுதறேன்னு மெய்ல்ல சத்தியம் பண்ணுனாங்க! மாணவரணி தலைவி பப்புவ போயஸ் கார்டன்ல பார்த்ததா கழக உளவுப்படை தலைவர் கும்கி சொல்லுவாருன்னு எதிர்பார்க்கிறோம்! ப்ரேவ் கேர்ள் விக்கி அண்ட் லேடீஸ் டீம் ஏன் பேசவே மாட்டேங்கறீங்க? என்னவோ ஐடியாவா சிந்திக்கறீங்கன்னு தெரியுது, அதை சொல்லல்லமுள்ளோ! ஒரு இனமானப்பேராசிரியரைப்போல, ஒரு நாவலரைப்போல நம்முடைய கழ்க சித்தப்பூ நைஜீரியாவிலிருந்து நமக்காக ரகசிய விமானத்தில் பறந்து போய் பின்லேடனை பார்த்து தேர்தல் கூட்டணி பற்றி பேசியது யாருக்காக? அது இந்திய தேர்தலா துபாய் தேர்தலான்னு கடைசிவரைக்கும் சொல்லாம் விமானத்துக்கு பெட்ரோல ஓசில புல் பண்ணீட்டு திரும்பி வந்த சித்தப்பூவ அல்கொய்தா தேடிகிட்டிருக்கு! எப்பிடியோ பட்டர்பிளை ஐஸ்வர்யாகூட ஒரு உலகப்படத்துல நடிச்சே தீருவேன்னு ஒரு வோர்ல்ட் மேப்ப கைல வச்சுகிட்டு கோடம்பாக்கத்துக்கல சுத்திகிட்டிருக்காரு!

சொன்னதும் ஐடியா, செய்வதும் ஐடியா!!

உருத்திரா said...

என்ன உலக பணக்கார வரிசையில் உங்க கழக நிலையை விட்டு விட்டீர்களே

Sadagopal Muralidharan said...

கல்லா கட்டலைன்னா எப்புடி தேர்தல்லே ஜெயிக்கறது. இதெல்லாம் வழிகள். நாளைக்குக்கட்சியிலிருந்து நீக்கமுடியாதுல்லே இப்படி ஒரு பிரச்சார ஊடகம் நம்ம கையில இருந்தா. அதேன்.

பெரிய கட்சின்னா எல்லோரும் தானா வந்து பணம் குடுக்கணும்.

சின்ன கட்சின்னா எல்லோர் கிட்டயும் போய் உண்டியல் ஏந்தணும்.

cheena (சீனா) said...

தொலைக்காட்சி ஆரம்பித்து தொல்லைகள் தடுக்கும் தநாஐமுகவிற்கு நல்வாழ்த்துகள்

*இயற்கை ராஜி* said...

:-))கழக பத்திரிக்கை,வானொலி எல்லாம் இல்லீங்களா

Sadagopal Muralidharan said...

//cheena (சீனா) said...
தொலைக்காட்சி ஆரம்பித்து தொல்லைகள் தடுக்கும் தநாஐமுகவிற்கு நல்வாழ்த்துகள்//

வாழ்த்துக்கு நன்றி. மேலும் நமது தொலைக்காட்சியின் பெருமையை ஒரே வார்த்தையில் இவ்வுலகிற்குப் புரிய வைத்த உங்களை த.நா.ஐ.மு.க-வின் சிரம் தாழ்ந்த நன்றிகள்

வாழ்க ஐடியா! வளர்க ஐடியா!!

Sadagopal Muralidharan said...

//*இயற்கை ராஜி* said...
:-))கழக பத்திரிக்கை,வானொலி எல்லாம் இல்லீங்களா//

தேவையா உங்களுக்கு. பாருங்க. எங்க தலைவி, கோவை கொள்கைசிங்கம், கழகத்தின் மெகாபோன் மயில் - ஐடியாகிளி ஆரம்பிச்சுட்டாங்க.

இருந்தாலும், வாழ்க ஐடியா! வளர்க ஐடியா!!

Cool Boy said...

முடியல..
பிரபலமாக ஐடியா குடுங்க சார்..

Sadagopal Muralidharan said...

//Cool Boy said...
முடியல..
பிரபலமாக ஐடியா குடுங்க சார்..//

பேர்லயே கூல் வெச்சுக்கிட்டு, முடியலன்னா எப்புடி...
உடனடியா கழகம் பங்குபெறும் உகாண்டா அதிபர் தேர்தல்லெ போட்டியிட விண்ணப்பம் பெற்று உலகப்பிரபலமாகும் முயற்சியை எடுக்கவும்...

Post a Comment

ஐடியா கழகம் உங்களுக்கு தேவையான ஐடியாக்களை அளிப்பது மட்டுமின்றி, உங்கள் மேலான ஐடியாக்களை பெரும் மரியாதையுடன் ஏற்பதை நமது கழக தீர்மானம் ஷரத்து 11ஏ தெளிவாக சொல்கிறது! எனவே உங்கள் கருத்தை, ஐடியாவை இந்த மாபெரும் சபையில் பார்வைக்கு வையுங்கள்! வருங்கால இந்தியாவுக்கு, ஆசியாவுக்கு ஏன் வருங்கால உலகத்துக்கே நம்மை விட்டால் கதி ஒன்றுமில்லை! வாருங்கள் ஐடியாக்களை அள்ளி விடுங்கள்