Wednesday, 7 April 2010

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு…டிக்கெட் விற்கப்படுகிறது….

vote

இதனால் சகலஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நமது கழகத்தின் சார்பாக போட்டியிட விருப்பமுள்ளவர்கள் டிக்கெட் விண்ணப்பங்களை உடனடியா தலைமைக்கழகத்தின் பெங்களூரு கிளையில் பெற்றுக்கொள்ளவும்.

image

ப்ளீஸ் நோட் திஸ் பாய்ண்ட்:

டிக்கெட் விலை:

ஒண்ணேமுக்கால் பெரிய “சி”. காசோலையோ, காசாணையோ, பணவோலையோ ஏற்றுக்கொள்ளப்படாது. ஒன்லி கேஷ். டாலரும் ஏற்றுக்கொள்ளப்படும்.

 

கல்வி:

செயல்முறைக்கல்வி போதுமானது. கழகத்தொலைக்காட்சியில் வரும் தற்காப்புக்கலை நிகழ்ச்சியில் வரும் அனைத்துக்கலைகளிலும் தேர்ச்சி. குறைந்தபட்சம்: நாட்டுக்காக தற்காப்பு

வயது:

கழகம் என்னதான் போராடினாலும் அரசாங்கம் குறைந்தபட்சமாக 35 வயதைக்குறீப்பிட்டுள்ளது. நாம் ஜெயித்தால் கண்டிப்பாக 3-ஆக மாற்றுவோம்.

உடை:

அஞ்சாறு கலர் கலர் கரை வேட்டி. மேலெ போடரதுக்கு ஒரு கோட். முடிஞ்சா துண்டும் தலைக்கு தொப்பியும். பிஞ்ச செருப்பு மேல் தகுதியாகும். சைக்கிள் செய்ன், சோடாபுட்டி கையாளத்தெரிவது கூடுதல் தகுதி.

வண்டி, வாகனம்:

நாப்பது அம்பது சுமோ - பிரியாணிக்குக் கூட தொட்டுக்க கலர்தண்ணி வாங்கப்பிடிக்கப்போக வர. பூத் புடிக்க. உருள்கட்டை, சோடாபாட்டில் போட்டுவைக்க.

பத்துப்பதினஞ்சு லாரி, பஸ்ஸு – கூட்டத்திற்கு தொண்டர்களை வாங்கிட்டுவர (கூட்டிட்டு வர?). ஓட்டுப்போட வாக்காளர்களை கூட்டிவர. (நம்ம கோஷ்டி ஆளுகளை டூர் கூட்டிப்போக – நம்பிக்கை வாக்கெடுப்பு வரை)

பேச்சு:

speak

கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்கவேண்டும். போட்டியாளருக்கு மட்டும். வீட்டில் மற்ற அனைவரும் “சைனீஸ்” படித்தாலும் சரியே. கெட்டவார்த்தை பேச நேர்ந்தால் மைக்கைமூடத்தெரிந்திருக்க வேண்டும்.

எழுத்து:

கடிதம் எழுத, அறிக்கைவிட, கவிதை, கழகக்காளைகளுக்கும், மான்களுக்கும் கொந்தளிக்கும் கட்டுரை எழுத குறஞ்சது ஒரு கோஸ்ட் ரைட்டர் வைத்திருக்கவேண்டும்.

போஸ்டர், பிட் நோட்டீஸ், பேன்னர், கொடி தோரணம்:

கழகம் அனைத்து ஐடியாக்களையும் டிசைனையும் இலவசமாக வழங்கும் (சென்னைத்தலைமைக்கழகம்) என்பதை மகிழ்ச்சியாக அறிவிக்கிறோம். ப்ரிண்ட், க்ட்டுவது, ஒட்டுவது, பிரிப்பது, கொடுப்பது ஆகிய பொறுப்புகளை உங்கள் வசமே ஒப்படைக்கிறது. தொண்டனான உன் மீது வைத்திருக்கும் அதீத நம்பிக்கையே தம்பி காரணம்.

தேர்தல் நாள்:

பிப். 2011

பொறுப்பு:

ஜனாதிபதி

நமது கழகத்தின் சார்பாக போட்டியிட முன்னாள் ஐ.நா. செயலர் கோபி அண்ணன், பழைய பாதுகப்பு ஆலோசகர் நரகாசுரன் (தீவளி வேண்டாம்னுட்டு), இரஷ்யப்போராளி புடின், இராக்கினை இரையாய்க்கொண்ட புஷ் ஆகியோர் 3 பெரிய “ச்” கொடுத்து விண்ணப்பித்துள்ளனர். ச்-ஐ சி-ஆகப்படிக்கவும்.

பின்தங்காதே தமிழினமே. புறப்படு பெட்டியோடு. வந்து சேர் பெங்களூரு. பெற்றுச்செல் விண்ணப்பம். வெற்றி நமக்கே.

முக்கியத்தகவல்:

எக்காரணம் கொண்டும் டிக்கெட் பணம் திரும்பக்கேட்கக்கூடாது. அப்படியே கேட்டாலும் பொதுக்குழுக்கூடி கும்மாங்குத்துத்திருவிழா நடைபெறும்.

இதைப்பற்றிய அரசாணை அனைவரின் பார்வைக்கு:

 

Elections in Uganda

Political System: Restricted Democratic Practice
President: Yoweri Kaguta Museveni (NRM) [since 26 January 1986; seized power in 1986 military rebellion, elected 1996, re-elected 2001 and 2006] The President is elected by direct popular vote for a 5-year term. Electoral System: Two Round (Run-off).
Prime Minister: Apollo Nsimbabi (NRM) [since 05 April 1999] The Prime Minister is appointed by the President.
Parliament [unicameral] (319 Seats) 215 members are elected by direct popular vote in single-member constituencies using the first-past-the-post system, 69 women are directly elected to represent each of the country's districts, 15 members representing special interest groups are indirectly elected (5 youth representatives, 5 representatives of persons with disabilities, and 5 worker's representatives), 10 members represent the Uganda People's Defence Force (army), and another 10 are ex-officio members; members serve 5-year terms.
Political Situation since Independence
1962-1966 Democracy
1966-1969 Restricted Democratic Practice
1969-1971 One Party State (UPC)
1971-1979 Military Regime
1979-1980 Transitional Government
1980         Military Regime
1980-1985 Restricted Democratic Practice
1985-1989 Military Regime
1989-1996 Transitional Period
1996-        Restricted Democratic Practice
2007 Freedom House Rating: Political Rights - 5, Civil Liberties - 4, Status: Partly Free
Next Scheduled Presidential Election: 2011
Next Scheduled National Assembly Election: 2011

* conditions apply

* எந்த வழக்குப்போடுவதாக இருந்தாலும் கொள்கைப்பெண்சிங்கம் மயில் அவர்கள் பெயரிலும், நைஜீரியப்போர்முரசு, ஆப்பிரிக்காக்கண்டத்தின் தேர்தல் அமைப்பாளர் சித்தப்பூ.. (சரிதானே மயிலக்கா) நைஜிரியா ராகவன் பெயரிலும் அனுப்ப, நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வாழ்க ஐடியா!

வளர்க ஐடியா!

அடுத்த உகாண்டா ஜனாதிபதி த.நா.ஐ.மு.க உறுப்பினரான நீதான் தம்பி / தமக்கை. புறப்படு பெட்டியுடன். பெங்களூரிலிருந்து நான்ஸ்டாப் டு உகாண்டா ஃப்ளைட் கழகம் சீட் போடும்.

வெற்றி ஐடியாவுக்கே……….

33 comments:

இராகவன் நைஜிரியா said...

// இதனால் சகலஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நமது கழகத்தின் சார்பாக போட்டியிட விருப்பமுள்ளவர்கள் டிக்கெட் விண்ணப்பங்களை உடனடியா தலைமைக்கழகத்தின் பெங்களூரு கிளையில் பெற்றுக்கொள்ளவும்.//

என்ன கொடுமையடா இது... அகில உலக தலைமைக் கழகம் நைஜிரியாவில் இருக்கும் போது, ஆப்ரிக்காவில் நடக்கும் தேர்தலுக்கு, பெங்களூருவில் விண்ணப்பங்களை பெற வேண்டுமாம்.

முதல்ல கழக பொதுக் குழுவை கூட்டுங்கப்பா...

இராகவன் நைஜிரியா said...

கழக பொதுக்குழுவை கூட்டி முதலில் கணக்கு சொல்லச் சொல்லுங்க..

இல்லாட்டி அண்ணா தமிழ் நாடு ஐடியா முன்னேற்றக் கழகம் தொடங்கப்படும் என்பதை, மயில் விஜியக்கா சார்பாக நான் இங்கு தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன்.

இராகவன் நைஜிரியா said...

// ஒண்ணேமுக்கால் பெரிய “சி”. காசோலையோ, காசாணையோ, பணவோலையோ ஏற்றுக்கொள்ளப்படாது. ஒன்லி கேஷ். டாலரும் ஏற்றுக்கொள்ளப்படும். //

யாருப்பா அது கவுன்சிலர் டிக்கெட் விலையை இங்கு போட்டது...

விலை தெரியவில்லை என்றால் முதலில் எங்களை கலந்தாலோசிக்கணும்..

த.நா.ஐ.மு.க. தலைவர்களை இது மாதிரி அவமானப் படுத்தக்கூடாது..

இராகவன் நைஜிரியா said...

// செயல்முறைக்கல்வி போதுமானது. கழகத்தொலைக்காட்சியில் வரும் தற்காப்புக்கலை நிகழ்ச்சியில் வரும் அனைத்துக்கலைகளிலும் தேர்ச்சி. குறைந்தபட்சம்: நாட்டுக்காக தற்காப்பு //

எல்லாவற்றிற்கும் மேலாக, கழக இடுகைகளுக்கு, பின்னூட்டம் போட வேண்டும்.

இராகவன் நைஜிரியா said...

// உடை:
அஞ்சாறு கலர் கலர் கரை வேட்டி. மேலெ போடரதுக்கு ஒரு கோட். முடிஞ்சா துண்டும் தலைக்கு தொப்பியும். பிஞ்ச செருப்பு மேல் தகுதியாகும். சைக்கிள் செய்ன், சோடாபுட்டி கையாளத்தெரிவது கூடுதல் தகுதி. //

கூடுதல் தேவைப் படும் தகுதி என்ற தலைப்பின் கீழ் வரவேண்டியதை, கல்வியின் கீழ் கொடுத்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்..

இராகவன் நைஜிரியா said...

// கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்கவேண்டும். போட்டியாளருக்கு மட்டும். வீட்டில் மற்ற அனைவரும் “சைனீஸ்” படித்தாலும் சரியே. கெட்டவார்த்தை பேச நேர்ந்தால் மைக்கைமூடத்தெரிந்திருக்க வேண்டும்.//

ஏற்றுக் கொள்ளப்பட்டது..

இராகவன் நைஜிரியா said...

// தேர்தல் நாள்:

பிப். 2011 //

30 - பிப்ரவரி - 2011. :-)

இராகவன் நைஜிரியா said...

// பின்தங்காதே தமிழினமே. புறப்படு பெட்டியோடு. வந்து சேர் பெங்களூரு. பெற்றுச்செல் விண்ணப்பம். வெற்றி நமக்கே.//

பெட்டியை நல்லா சோதனைப் போட்ட பிறகே கழக கட்டிடத்திற்குள் அனுமதிக்கப் படும்..

இராகவன் நைஜிரியா said...

// * எந்த வழக்குப்போடுவதாக இருந்தாலும் கொள்கைப்பெண்சிங்கம் மயில் அவர்கள் பெயரிலும், நைஜீரியப்போர்முரசு, ஆப்பிரிக்காக்கண்டத்தின் தேர்தல் அமைப்பாளர் சித்தப்பூ.. (சரிதானே மயிலக்கா) நைஜிரியா ராகவன் பெயரிலும் அனுப்ப, நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. //

ஏண்டாப்பா குழந்தே... இது ஒனக்கே நல்லா இருக்கா? நுங்கு திங்கறத்து ஒருத்தன்... அடிவாங்க இரண்டு பேரா...

சரியில்ல அம்பி... அவ்வளவுதான் நான் சொல்லுவேன்..

இராகவன் நைஜிரியா said...

ஐடியா கழகத்தின் வலைப்பூவில்... கமெண்ட் மாடரேஷன் வச்சா... பின்னூட்டங்கள் போடுவது ரொம்ப கஷ்டமா இருக்கு...

முதல்ல என்ன பின்னூட்டம் போட்டோம் அப்படின்னு தெரிஞ்சால் தான், அடுத்த பின்னூட்டம் போட ஒரு ஃப்ளோ வரும்.

இதுல் கொடுமையான விஷயம், நான் மட்டும்தான் பின்னூட்டம் அதிகமா போட்டுகிட்டு இருக்கேன்... மத்தவங்க.. கையை கட்டிகிட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்காங்க..

யாருப்பா இங்க நாட்டாண்மை... கூட்டுங்கப்பா கூட்டாத்த...

சொம்பு, ஜமக்காளம் எல்லாம் நாட்டாண்மை அவர் செலவுல எடுத்துகிட்டு வரவேண்டும்..

இராகவன் நைஜிரியா said...

கழக உறுப்பினர்கள் எண்ணிக்கை 15. தமிழ் மணத்தில் விழுந்த ஓட்டு 1 தமிழிஷ் 2. இப்படி இருந்தா கழகம் வளருவது எப்படி..

போடுங்கம்மா ஓட்டு... ஐடியா இடுகைப் பார்த்துன்னு கூவ வேண்டியதுதான் போலிருக்கு..

ஆபிஸ்பாய் கூட ஓட்டுப் போடலாம்..

இராகவன் நைஜிரியா said...

இதுக்கு மேலே என்னால பின்னூட்ட முடியாது.... நான் போட்ட பின்னூட்டங்களும், வேறு யாராவது போட்ட பின்னூட்டங்களும் வந்த பின் அடுத்த பின்னூட்டம்...

I AM ON STRIKE..

Sadagopal Muralidharan said...

விண்ணப்பப்படிவம்னா விளையாட்டுன்னு நினைச்சிட்டீங்களா போர்முரசே. டிக்கெட் கிடைக்குமிடம் பெங்களூருவைவிட்டு மாறாது. மாறவும் விடமாட்டோம். தலைமை இருக்கும்போது இதைப்பற்றி என்ன பேச்சு.

போர்முரசு நம்மை எதிர்க்கும் எதிரிக்கட்சிகளுக்குத்தானேயொழிய உட்கட்சியில் அல்ல நைஜீரிய வைரமே...

இது வெறும் ரெஜிஸ்ட்ரேசன் ஃபீஸ். போட்டிக்குத்தேர்ர்ந்தெடுக்கப்பட்டால், பொதுக்குழு உங்களுடன் கலந்தாலோசித்து தக்க விலை நிர்ணயிக்கப்படும். (ஆமாம் இப்போ என்ன ரேட் ஓடுது உங்க ஊர்லெ?)

கணக்கு. பிணக்கு. ஆமணக்கு. எல்லாம் கசக்கும். அதாலே கேக்கப்படாது. சரியா த்மிழே.

வாழ்க ஐடியா
வளர்க ஐடியா

(கொள்கை முழக்கத்தையே மறந்துட்டு கணக்காம் கணக்கு.)

Sadagopal Muralidharan said...

Aiya,
Kalakkureenga ponga. Dammam ilirunthu B'lore vara mudiyathu , iruppinum Muyarchi seigiren.

Janathipathi aaga virumbum adi matta thondan.

PORALI
MANNAR MANI

சவுதியில் இருந்து மன்னர் மணியின் விருப்பம். அனைவருக்கும் சமமாக வாய்ப்புண்டு என்பது கழகத்தின் கொள்கை.

திரு. மன்னர் மணி அவர்களே, உங்கள் இந்திய நணபர் மூலம் பணம் அனுப்புங்கள். உங்களைத்தேடி விண்ணப்பம் வந்து சேரும்

க.பாலாசி said...

//நாம் ஜெயித்தால் கண்டிப்பாக 3-ஆக மாற்றுவோம்.//

இந்த இடத்துல விழுந்து விழுந்து சிரிச்சேன்... எப்டிங்க உங்களுக்குள்ள இவ்வளவு நகைச்சுவைத்திறன்... வியந்துபோனேன்....

இராகவன் நைஜிரியா said...

// Sadagopal Muralidharan said...
Aiya,
Kalakkureenga ponga. Dammam ilirunthu B'lore vara mudiyathu , iruppinum Muyarchi seigiren.

Janathipathi aaga virumbum adi matta thondan.

PORALI
MANNAR MANI

சவுதியில் இருந்து மன்னர் மணியின் விருப்பம். அனைவருக்கும் சமமாக வாய்ப்புண்டு என்பது கழகத்தின் கொள்கை.

திரு. மன்னர் மணி அவர்களே, உங்கள் இந்திய நணபர் மூலம் பணம் அனுப்புங்கள். உங்களைத்தேடி விண்ணப்பம் வந்து சேரும் //

எதுக்கு... யாருக்கு இந்த பதில் புரியவில்லை.

Sadagopal Muralidharan said...

எதுக்கு... யாருக்கு இந்த பதில் புரியவில்லை

என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மடல். இவர் சவுதியில் பணிப்ரிகிறார். தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் வாங்க பெங்களூரு வருவது சிரமம் என்கிறார். அதற்கான பதிலே இது..

நல்லாக்கேக்கரீங்கோ டவுட்.

மத்த கேள்விக்கு நாளை பதில்...

Sadagopal Muralidharan said...

//இராகவன் நைஜிரியா said...
// செயல்முறைக்கல்வி போதுமானது. கழகத்தொலைக்காட்சியில் வரும் தற்காப்புக்கலை நிகழ்ச்சியில் வரும் அனைத்துக்கலைகளிலும் தேர்ச்சி. குறைந்தபட்சம்: நாட்டுக்காக தற்காப்பு //

எல்லாவற்றிற்கும் மேலாக, கழக இடுகைகளுக்கு, பின்னூட்டம் போட வேண்டும்.//

இப்புடி போட்டுத்தாக்குனா பயமா இருக்குமா? இருக்காதா? ரோஜனைசெஞ்ஜுதானே பின்னூட்டம் போடணும். இல்லைன்னா அதுக்கொரு கேள்வி வரும்ல.

Sadagopal Muralidharan said...

//க.பாலாசி said...
//நாம் ஜெயித்தால் கண்டிப்பாக 3-ஆக மாற்றுவோம்.//

இந்த இடத்துல விழுந்து விழுந்து சிரிச்சேன்... எப்டிங்க உங்களுக்குள்ள இவ்வளவு நகைச்சுவைத்திறன்... வியந்துபோனேன்...//

என்ன ஒரு நையாண்டி. கழகத்தின் அருமை பெருமை புரியாமல். உடனடியாக கழகத்தின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து நம்ம கொள்கை விளக்கப்புத்த்கத்தை மனப்பாடம் செய்யுங்கள் அப்புறம் இந்த 3 முடியுமா? முடியாதான்னு தெரியும். 33% பாஸ் ஆயிடுச்சில்ல!!!

Sadagopal Muralidharan said...

//இராகவன் நைஜிரியா said...
கழக உறுப்பினர்கள் எண்ணிக்கை 15. தமிழ் மணத்தில் விழுந்த ஓட்டு 1 தமிழிஷ் 2. இப்படி இருந்தா கழகம் வளருவது எப்படி..

போடுங்கம்மா ஓட்டு... ஐடியா இடுகைப் பார்த்துன்னு கூவ வேண்டியதுதான் போலிருக்கு..

ஆபிஸ்பாய் கூட ஓட்டுப் போடலாம்..//

கண்டிப்பாக.. ஓட்டுப்போடாத ஒவ்வொரு தொண்டனும், ஆபீஸ் பாயும், உடனடியாக பெங்களுரு அமைப்பையோ, நைஜீரியா அமைப்பையோ உடனடியாக தொடர்பு கொண்டு தன்னிலை விளக்கம் அளிக்கவும்...இல்லைன்னா என்ன நடக்கும்???? என்றே யாருக்கும் தெரியாது....

Sadagopal Muralidharan said...

//இராகவன் நைஜிரியா said...
// * எந்த வழக்குப்போடுவதாக இருந்தாலும் கொள்கைப்பெண்சிங்கம் மயில் அவர்கள் பெயரிலும், நைஜீரியப்போர்முரசு, ஆப்பிரிக்காக்கண்டத்தின் தேர்தல் அமைப்பாளர் சித்தப்பூ.. (சரிதானே மயிலக்கா) நைஜிரியா ராகவன் பெயரிலும் அனுப்ப, நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. //

ஏண்டாப்பா குழந்தே... இது ஒனக்கே நல்லா இருக்கா? நுங்கு திங்கறத்து ஒருத்தன்... அடிவாங்க இரண்டு பேரா...

சரியில்ல அம்பி... அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.//

பொறுப்புகளையும், கழகத்தை சிறப்புற வழி நடத்தும் கடமையையும் உங்கள் இருவர் பால் ஒப்படைத்துள்ளதை நினைத்து புளகாங்கிதம் அடைவதை விட்டுவிட்டு, புலம்புகிராயே தமிழினமே...ஐடியாவைப்புரிஞ்ஜிக்கோணும்.

வாழ்க ஐடியா!
வளர்க ஐடியா!!

Sadagopal Muralidharan said...

//இராகவன் நைஜிரியா said...
ஐடியா கழகத்தின் வலைப்பூவில்... கமெண்ட் மாடரேஷன் வச்சா... பின்னூட்டங்கள் போடுவது ரொம்ப கஷ்டமா இருக்கு...

முதல்ல என்ன பின்னூட்டம் போட்டோம் அப்படின்னு தெரிஞ்சால் தான், அடுத்த பின்னூட்டம் போட ஒரு ஃப்ளோ வரும்.

இதுல் கொடுமையான விஷயம், நான் மட்டும்தான் பின்னூட்டம் அதிகமா போட்டுகிட்டு இருக்கேன்... மத்தவங்க.. கையை கட்டிகிட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்காங்க..

யாருப்பா இங்க நாட்டாண்மை... கூட்டுங்கப்பா கூட்டாத்த...

சொம்பு, ஜமக்காளம் எல்லாம் நாட்டாண்மை அவர் செலவுல எடுத்துகிட்டு வரவேண்டும்.//

வணக்கமுங்கோ!!
உடனடியாக உங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டாலும், நடப்பு ஆண்டு கூட்டத்தொடர் முடியும் முன் சட்ட முன்வரைவு தீர்மானம் கொண்டுவரப்படும் என்பதை இன்னேரத்திலே கூறக்கடமைப்பட்டுள்ளேன்.

கண்டிப்பாக நீங்க சொல்றதை நான் எடுத்டுட்டு வர்றேன். ஆனா, ஆலமரத்தையும், திண்ணையையும் நீங்கதான் எடுத்துட்டு வரோணும்.
சொல்லிப்போட்டேன்
சொல்லிபோட்டேன்.
சொல்லிபொடேன்.

Sadagopal Muralidharan said...

//இராகவன் நைஜிரியா said...
இதுக்கு மேலே என்னால பின்னூட்ட முடியாது.... நான் போட்ட பின்னூட்டங்களும், வேறு யாராவது போட்ட பின்னூட்டங்களும் வந்த பின் அடுத்த பின்னூட்டம்...

I AM ON STRIKE..//

என்ன இது. உன்னத்தான் தம்பி இந்தக்கழகமும், இந்தத்தமிழினமும், ஆப்பிரிக்காக்கண்டமும் நம்பி இருக்கிறது. எதிர்க்கட்சிபோல் வெளிநடப்பு செய்வது அழகல்ல. எதுவாயிருந்தாலும் நம்ம கழக அரண்மனையில் வெச்சுக்குவோம்.

கம் பேக் ப்ளீஸ். வீ ஆர் வையிடிங்.

LK said...

//எந்த வழக்குப்போடுவதாக இருந்தாலும் கொள்கைப்பெண்சிங்கம் மயில் அவர்கள் பெயரிலும், நைஜீரியப்போர்முரசு, ஆப்பிரிக்காக்கண்டத்தின் தேர்தல் அமைப்பாளர் சித்தப்பூ.. (சரிதானே மயிலக்கா) நைஜிரியா ராகவன் பெயரிலும் அனுப்ப, நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.//
ரொம்ப சரி

இந்த கழகத்தில பொருளாளர் ஆகா என்ன பண்ணனும்

Sadagopal Muralidharan said...

//LK said...
//எந்த வழக்குப்போடுவதாக இருந்தாலும் கொள்கைப்பெண்சிங்கம் மயில் அவர்கள் பெயரிலும், நைஜீரியப்போர்முரசு, ஆப்பிரிக்காக்கண்டத்தின் தேர்தல் அமைப்பாளர் சித்தப்பூ.. (சரிதானே மயிலக்கா) நைஜிரியா ராகவன் பெயரிலும் அனுப்ப, நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.//
ரொம்ப சரி

இந்த கழகத்தில பொருளாளர் ஆகா என்ன பண்ணனும்//

அந்த மாபெரும் பொறுப்பை பெங்களுரு அமைப்பே அதாவது அவையடக்கத்துடன் ஏற்றுக்கொண்ட்டுள்ளது

என்று.. Sadagopal Muralidharan said...

Sadagopal Muralidharan said...

கட்சியின் முக்கியப்பொறுப்பில் உள்ள நமது இனமான ஐடியா ஆபீஸ் பாய்கள் - மயில் மற்றும் தங்கமணிபிரபு ஆகிய இருவரும் முறையே அக்கரைக்கொடிவேரி, கும்மிடிப்பூண்டி போன்ற வெளினாடு சென்று விண்ணப்பப்ப்டிவ டிசைன் இறுதி செய்யுராங்கோ. அதான் ஒரு பின்னூட்டமும் போடலை...

அதனாலெ நைஜீரியப்போர்வாளெர் கோபம் கொள்ளாதே..

Sadagopal Muralidharan said...

நிறயப்பேருக்கு இன்னும் ஓட்டுப்போடும் வயசு வர்லே. அதான் ஓட்டு விழுகல. இதுக்க்ர்ல்லாம் பயந்தா உகாண்ட்டா தேர்தல்ல எப்புடி போட்டி போடரது.

வீறு நடை போடு. வெற்றி ஐடியாவுக்கே....

cheena (சீனா) said...

நாளுக்கு நாள் உறுப்பினர் எண்ணிக்கை பன்மடங்கு பெருகுகிறது - வயசுக்கு வராத சின்னப்பசங்களுக்கு எல்லாம் சர்டிபிகேட் வாங்கிடலாம் - எல்லாரும் ஓட்டுப்போடணும் ஆமா - நேரமில்ல -

*இயற்கை ராஜி* said...

//ஒன்லி கேஷ். டாலரும் ஏற்றுக்கொள்ளப்படும்//

முருகன் டாலரா.. ஐயப்பன் டாலரான்னு சொல்லவேயில்லையே

Sadagopal Muralidharan said...

//cheena (சீனா) said...
நாளுக்கு நாள் உறுப்பினர் எண்ணிக்கை பன்மடங்கு பெருகுகிறது - வயசுக்கு வராத சின்னப்பசங்களுக்கு எல்லாம் சர்டிபிகேட் வாங்கிடலாம் - எல்லாரும் ஓட்டுப்போடணும் ஆமா - நேரமில்ல//

உறுப்பினர் எண்ணிக்கை பெருகுகிறது என்ற நமது கொள்கைப்பெருஞ்சுவர் - சீனா-வின் எழுத்து நமது கழகப்பொதுக்குழுவையும் செயற்குழுவையும் புளகாங்கிதம் அடையச்செய்துவிட்டது. கொள்கைக்கொழுந்தே...நன்றி.

வாழ்க ஐடியா! வளர்க ஐடியா!!

Sadagopal Muralidharan said...

//*இயற்கை ராஜி* said...
//ஒன்லி கேஷ். டாலரும் ஏற்றுக்கொள்ளப்படும்//

முருகன் டாலரா.. ஐயப்பன் டாலரான்னு சொல்லவேயில்லையே.//

இயறகையாகவே வெட்டி எடுக்கப்பட்டு, உருக்கி, உருவாக்கப்பட்ட தங்க, வெள்ளி, வைர, வைடூரிய, கோமேதகங்களால் செய்யப்பட்ட டாலர் முருகன், ஐய்யப்பன் மட்டுமல்ல, எம்மதமும் சம்மட்கமுங்கோ!!!

வாழ்க ஐடியா! வளர்க ஐடியா!!

வால்பையன் said...

//டாலரும் ஏற்றுக்கொள்ளப்படும்.//

வடபழனி முருகன் டாலர் ஒகேவா!?

Sadagopal Muralidharan said...

//வால்பையன் said...
//டாலரும் ஏற்றுக்கொள்ளப்படும்.//

வடபழனி முருகன் டாலர் ஒகேவா!?//

வாங்க வால்பையன்.
வடபழனி முருகன் டாலர் த்ங்கத்திலெயோ, வைரத்திலெயோ, பிளாட்டினத்திலயோ இருந்தால் போதுமானது. கண்டிப்பா ஓகே.

வாழ்க ஐடியா! வளர்க ஐடியா!!

Post a Comment

ஐடியா கழகம் உங்களுக்கு தேவையான ஐடியாக்களை அளிப்பது மட்டுமின்றி, உங்கள் மேலான ஐடியாக்களை பெரும் மரியாதையுடன் ஏற்பதை நமது கழக தீர்மானம் ஷரத்து 11ஏ தெளிவாக சொல்கிறது! எனவே உங்கள் கருத்தை, ஐடியாவை இந்த மாபெரும் சபையில் பார்வைக்கு வையுங்கள்! வருங்கால இந்தியாவுக்கு, ஆசியாவுக்கு ஏன் வருங்கால உலகத்துக்கே நம்மை விட்டால் கதி ஒன்றுமில்லை! வாருங்கள் ஐடியாக்களை அள்ளி விடுங்கள்