Monday 19 April 2010

எப்புடி கடிக்கிறது? திட்டறது? கழகக்கண்மணிகளுக்குப் பயிற்சி…..

கழக வரலாற்றில் முதல்முறையாக தங்களை இணைத்துக்கொண்டுள்ள கழகக்கண்மணிகளுக்கு பின்னூட்டம் இடுவது எப்படி என்கிற ஒரு பயிற்சி வகுப்பு எடுக்க கணினிக்குழு கூடி ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

ஏறகனவே உறுப்பினராக இருந்து கொண்டு பின்னூட்டமிடாமல் டிமிக்கி கொடுக்கும் அனைவருக்கும் சேத்துத்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்…

அதன் சோதனையோட்டமே இது. இந்தசோதனையோட்டத்தை அனைவரும் படித்து, இரசித்து, உபயோகப்படுத்திக்கொள்ளுமாறு கணினிக்குழு சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேவையான உபகரணங்கள், சாதனங்கள், இன்னும் மற்ற பிற:

ஒரு கணினி (எலியும்(Mouse), சாவிப்பலகை(Keyboard) யுடன்) முக்கியமா மின்சார இணைப்பு (வீராசாமி ஒத்துழைக்கலைன்னா செயற்கை மின்சாரம் – UPS/Battery)

இணைய இணைப்பு. (வீட்டிலிருந்தும், அலுவலகத்திலிருந்தும், இணையகுழம்பியகத்திலிருந்தும்(Internet Cafe), எங்கிருந்துவேண்டுமானாலும்…இணைப்பு தான் முக்கியம்)

ஆங்கில எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்கள் தெரிந்திருக்கவேண்டும். (சில பேருக்கு கண்ணாடி அணியவேண்டியிருக்கலாம்)

குறைந்தபட்சம் ஒரு விரலிலாவது தட்டச்சு செய்யவேண்டிவரும்

இப்போது படத்துடன் விளக்கம்.

  • முதலில் நமது த.நா.ஐ.மு.க வலைப்பூ முகவரியை உலாவியில் தட்டச்சவேண்டும்.

ottu1

  • உடனே நமது கழக்த்தின் வலைப்பூ வந்து உங்கள் மனதிலெல்லாம் ஒரு புன்னகைப்பூவைச்சொரியும் (இதெல்லம் ஒரு ப்ளாக், அற்புதமான் ப்ளாக், அட்ரா சக்கை அட்ரா சக்கை அப்படின்னு ஏதாவது ஒண்ணு..)

ottu1

  • உங்கள் திரையில் சமீபத்தில் ரிலீசான பதிவின் எழுத்தும் படமும் இருக்கும். அதை நன்றாகப் படிக்கவும்.

ottu1

  • இப்பொத்தான் ரொம்ப முக்கியமான செயல் ஒரு வீரமுள்ள, கழகத்தின் மேல் பற்றுள்ள ஒரு தொண்டன் செய்யவேண்டிய கடமையை எப்படி ஆற்றவேண்டும் என்கிற படம் வரைந்து பாகங்களை குறித்துள்ளது நமது கணினிக்குழு

ottu1

- மேலே குறிப்பிட்டுள்ள கமென்ட்ஸ் (comments) என்று எழுதியிருக்கும் இடத்தைக்கிள்ளவும்.

  • உடனே ஒரு சாளரம் நமது கழகவிடிவெள்ளி உதித்ததுபோல் உடனடியாக தோன்றும். அது தனியான சாளரமாகவும் இருக்கும். இல்லையென்றால் உள்பொதிந்த சாளரமாகவும் இருக்கும் எப்படி இப்படித்தான்

 

ottu2

  • அந்தச்சாளரத்தில் உங்களுக்குப்பிடிச்ச, பிடிக்காத, உங்களுக்குத்தெரிஞ்ச, தெரியாத, உங்களுக்குப்புரிஞ்ச, புரியாத எதைப்பத்தியும், ஏதாவதைப்பத்தியும் எழுதோணும். எப்படி இப்படித்தான். இன்னும் விளக்கம் வேணும்னா கீழே சாளரத்துக்கு மேலெ எழுதியிருக்கறதைப்படிக்கிறது….

ottu3

- அப்புறம் யார் எழுதுனது? அப்படின்னு தெரிஞ்சுக்க உங்களுடைய மின்னஞ்சல் முகவரி மூலமா இந்தக்கருத்தைப்பதிக்கணும். அதுக்கு போஸ்ட் கமென்ட் பொத்தானை பிக்கணும் (அழுத்தணும்)

  • அதுக்கும் ஒரு சாளரம் உதயமாகும். அதுலே உங்க மின்னஞ்சல் முகவரியையும்(email id) கடவுச்சொல்லையும் (password) தட்டச்சவும்.

image

  • முக்கியமா மறக்காம இந்த சைன் இன் (sign in) பொத்தானை அமுக்கவும். அப்புறமா இது நீங்க கருத்தைப்பதிசெஞ்ச வலைப்பூவில போய் நிக்கும். அதுலே நீங்க எழுதியிருக்கறதை இனியொரு த்டவை திரும்பப்படிக்கும் வாய்ப்பைக்கொடுக்கும். ஏன்னா இனியும் கொஞ்சம் கடிக்கறதுன்னா அதுக்கும் ஒரு வாய்ப்பு.

Ottu6

இப்படித்தான் பின்னூட்டம் போடணும். இதுக்கப்புறம் நிறைய பேர் வந்து எழுதுவாங்க. நம்ம எழுதுனதுக்கு மறுப்பு சொல்வாங்க. எதுக்கும் சலனப்படாம, சஞ்சலப்படாம, கோவப்படாம, வெக்கப்படாம நம்மளும் எத்தனை எழுத்துப்பிழையிருந்தாலும் கண்டுக்காம நம்ம பணியை ஆத்தவேணும்னு கழக கணினிக்குழு கேட்டுக்கொல்கிறது (வேணும்னு தான். இதுல எந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்கும் இல்ல)

முக்கிய குறிப்பு:

இதில் ஏதாவது சிரமம், ஐயம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்:

இந்தியா: ஐடியாகிளி தலைமை ஆசிரியை – மயில் (அவர்வலைப்பூவையும், அவர் கழகத்திற்கு ஆற்றும் தொண்டையும்பற்றித்தெரிய தலைமையாசிரியரின் தலைமை ஆபிஸ் பாய் என்ற தலைப்பின் கீழ் இருக்கும் “மயில்” – ஐக்கிள்ளவும்

ஆப்பிரிக்க, மத்தியகிழக்காசிய நாடுகள்: நைஜீரியப்போர்வாள், கழகத்தின் உலகப்போர்முரசு, நைஜீரியா இராகவன்

மற்ற நாடுகள் மற்றும் உலகமெங்கும் இருக்கும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு: நாந்தேன். என்ன செய்யறது. யாராவது பின்னூட்டம் போட்டாத்தானெயாகும்

எச்சரிக்கை:

அடுத்ததாக எப்படி ஓட்டுப்போடுவது என்கிற பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இப்போதே அனைவரும் அப்திவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பின்னூட்டப்பதிவு இலவசம். ஓட்டுப்பயிற்சி கட்டணம் கணினிக்குழு பொதுக்குழுவுடன் கலந்தாலோசித்து கழக அறிவிப்பாக வெளியிடும்.

சொல்வதும் ஐடியா! செய்வதும் ஐடியா!!

வாழ்க ஐடியா! வளர்க ஐடியா!!

13 comments:

இராகவன் நைஜிரியா said...

தமிழிஷில் ஓட்டு போட்டாச்சு...

தமிழ் மணத்தில் இணைக்காததால் ஓட்டு போட இயலவில்லை.

முதல் பின்னூட்டமும் போட்டாச்சு..

Sadagopal Muralidharan said...

கழகத்தின் முன்னொடியே....உங்களைப்போன்ற கொள்கை மறவர்களால் மட்டுமே கழகம் மேலும் சிறக்கும்...
வாழ்க ஐடியா! வளர்க ஐடியா!!

குறிப்பு: பதிவிட்ட சில மணித்துளிகளுக்குள் பின்னூட்டம் இட்ட வேகம் ஈடு கொடுக்க எந்த எதிர்க்கட்சிகளாலும் முடியாது.

வெற்றி நமதே....

இராகவன் நைஜிரியா said...

தமிழ் மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாச்சுப்பா..

Anonymous said...

சொல்ல வேண்டியதை சுருக்கமாக சொல்லியிருக்கலாம்.

ரசிக்கமுடியவில்லை.

இப்படிக்கு

ஒரு கழக கண்மணி

இராகவன் நைஜிரியா said...

அன்பு கழகக் கண்மணி...

உனக்குத் தெரியாதா...

கழகம் என்று வந்தபின் சுருக்கமாக சொல்வது என்ற வழக்கமே கிடையாதுங்க...

Sadagopal Muralidharan said...

//இராகவன் நைஜிரியா said...
அன்பு கழகக் கண்மணி...

உனக்குத் தெரியாதா...

கழகம் என்று வந்தபின் சுருக்கமாக சொல்வது என்ற வழக்கமே கிடையாதுங்க...//

நன்றி இராகவன்...

கழகத்தை நல்லாப்புரிஞ்சு வெச்சிருக்கீங்க..

Sadagopal Muralidharan said...

//Anonymous said...
சொல்ல வேண்டியதை சுருக்கமாக சொல்லியிருக்கலாம்.

ரசிக்கமுடியவில்லை.

இப்படிக்கு

ஒரு கழக கண்மணி//

முகம் இல்லா கழகக்கண்மணியே...
இனமான வைரம் தங்கமணிபிரபு கழகப்பொதுக்குழுவிலே கொண்டுவந்த தீர்மானப்படி முகமூடி போட்ட கணமணி எதிர்முகாமாக இருந்தாலும், உள்முகாமாக இருந்தாலும் பதில் சொல்லக்கூடாது என்பது தான்.
இருந்தாலும் இது ஒரு பயிற்சி வகுப்பாக இருப்பதால் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்...
மேலும் உன்னைப்போன்ற கணினி வல்லுனனுக்குப்புரிவதற்காக அல்ல இந்தப்பயிற்சி.
புதிதாக கழகத்தில் இணைந்துள்ள, ஏற்கனவே இணைந்து பின்னூட்டம் அளிக்காத, அளிக்கத்தெரியாதவர்களுக்கு.
இருந்தாலும் கருத்து வரவேற்கத்தக்கது..
ஆனாலும் நம்ம எழுத்து மாறாதுங்கோ!!!!

Sadagopal Muralidharan said...

//இராகவன் நைஜிரியா said...
தமிழ் மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாச்சுப்பா..//

நன்றி இணைப்புக்கும், ஓட்டுக்கும்.

வாழ்க ஐடியா! வளர்க ஐடியா!!

Sadagopal Muralidharan said...

நானும் போட்டேன் ஓட்டு...
இராகவன் சொன்னதைக்கேட்டு....

ஓட்டுப்பட்டை பின்னூட்டத்தை கிள்ளினால் மட்டுமே தெரிகிறது.

தங்கமைணிபிரபு: உடனடியாக கவனிக்கவும்...

Anonymous said...

//முகம் இல்லா கழகக்கண்மணியே...
இனமான வைரம் தங்கமணிபிரபு கழகப்பொதுக்குழுவிலே கொண்டுவந்த தீர்மானப்படி முகமூடி போட்ட கணமணி எதிர்முகாமாக இருந்தாலும், உள்முகாமாக இருந்தாலும் பதில் சொல்லக்கூடாது என்பது தான்.
இருந்தாலும் இது ஒரு பயிற்சி வகுப்பாக இருப்பதால் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்...
மேலும் உன்னைப்போன்ற கணினி வல்லுனனுக்குப்புரிவதற்காக அல்ல இந்தப்பயிற்சி.
புதிதாக கழகத்தில் இணைந்துள்ள, ஏற்கனவே இணைந்து பின்னூட்டம் அளிக்காத, அளிக்கத்தெரியாதவர்களுக்கு.
இருந்தாலும் கருத்து வரவேற்கத்தக்கது..
ஆனாலும் நம்ம எழுத்து மாறாதுங்கோ!!!!//

அடேங்கப்பா! இவ்வளவு நீளமான பதிலா!

‘நம்ம எழுத்து மாறாதுங்கோ!!// என்ற வரி மட்டும் போதுமே.

ஜமாயுங்கள். உங்களுக்கு நன்னா நேரம் போகிறது.

தமிழ்நாடு ஐடியா முன்னேற்ற கழகம் said...

<<>>>


இதுக்குதான் அப்பவே பொதுக்குழுவுல சொன்னாங்க, கழகத்துல காமெடி அணி ஒன்னு தொடங்குங்க எப்பிடியும் ஆனானின்னு காமெடி பீஸுக ஒன்னு ஒன்னா வரும்னு! கேட்டீங்களா?

சரிங்க ஒனானி, ச்சீ டினானி, அட,.... அனானி இனிமே நீங்கதான் கழகத்திற்கு வெளியிலிருந்து அதரவு தரும் உளறுவாயர்கள் சங்கத்தலைவர்! ரைட்டா..! கண்டினியு.. கண்டினியு! தொடர்ந்து இப்பிடியே உளறிட்டிருந்தீங்கன்னா நீலகிரி சுள்ளிபொறுக்கிகிட்ட புடிச்சு கொடுத்துடுவோம்! இலக்கணத்தமிழ்ல நீங்க கேக்கறமாதிரி சுருக் சுருக்குனு சொல்லுவாரு! ஆனா மக்கா நீங்க ஆணோ பொண்ணோ! உங்க கற்புக்கு உத்தரவாதம் இல்ல!.......கிழிஞ்சுரும்!!

ராஜ நடராஜன் said...

ஐயா,

எலிக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதால் இன்ரு ஒரு நாள் மட்டும் விடுமுரை தருமாரு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பெரிய ர எப்படி போடுவது என்பதையும் அடுத்த பாடத்தில் சொல்லிக் கொடுக்கும்படி வேண்டும்

உங்கள் உண்மையுள்ள மாணவன்
பெருச்சாளி.

Sadagopal Muralidharan said...

//ராஜ நடராஜன் said...
ஐயா,

எலிக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதால் இன்ரு ஒரு நாள் மட்டும் விடுமுரை தருமாரு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பெரிய ர எப்படி போடுவது என்பதையும் அடுத்த பாடத்தில் சொல்லிக் கொடுக்கும்படி வேண்டும்

உங்கள் உண்மையுள்ள மாணவன்
பெருச்சாளி.//

ராஜாவே இப்படிச்சொன்னா எங்களைப்போன்ற குடிமக்கள் என் செய்வது. இருந்தாலும் எதற்கும் ஒரு வார்த்தை ராஜகுருவிடம் சொல்லிவைக்கிறேன் மன்னா!!
எலிக்காய்ச்சலை சரிசெய்யவும் ராஜவைத்தியரிடம் மருந்து கொடுக்கச்சொல்கிறேன்!!
நன்றி! வருகைக்கும், கருத்துக்கும்!

Post a Comment

ஐடியா கழகம் உங்களுக்கு தேவையான ஐடியாக்களை அளிப்பது மட்டுமின்றி, உங்கள் மேலான ஐடியாக்களை பெரும் மரியாதையுடன் ஏற்பதை நமது கழக தீர்மானம் ஷரத்து 11ஏ தெளிவாக சொல்கிறது! எனவே உங்கள் கருத்தை, ஐடியாவை இந்த மாபெரும் சபையில் பார்வைக்கு வையுங்கள்! வருங்கால இந்தியாவுக்கு, ஆசியாவுக்கு ஏன் வருங்கால உலகத்துக்கே நம்மை விட்டால் கதி ஒன்றுமில்லை! வாருங்கள் ஐடியாக்களை அள்ளி விடுங்கள்