Tuesday, 30 March 2010

ஐமுக – ஒரு அவசர பிரகடன(ண)ம்!

 

ஐமுக மகளிரணி தலைவி தியாக சொரூபம் மயிலு

ஐ.மு கழகத்தின் நைஜீரியப்போர்வாள் ராகவன்

ஐமுக புதுமாப்பிளைகள் அணி செயலர் சஞ்சய் காந்தி

ஐமுகழகத்தின் கர்நாடக மாநில அமைப்பாளர் முரளிதரன்

ஐமுக உளவுப்படை தளபதி கும்கி

மகளிரணி இனமுரசு சின்ன அம்மணி

கொளகை எதுவும் முடிவு செய்யப்படாத நிலையிலும் நாந்தான் கொ.ப.செ என்று அடம்பிடிக்கும் அன்னை சந்தனமுல்லை

ஐமுக இளைஞர் அணி செயல்வீரர் சாம் தாத்தா

கழகத்தின் செய்திமுரசு “ஐடியாகிளி” இதழின் இணைஆசிரியர் நேசமித்தரன்

கழகத்தின் (ரெம்ப) இளஞ்சிங்கம் பப்பு பாப்பா

என இங்கே கூடியிருக்கும் கூட்டம் ஒரு ஐடியா தேரோட்டம்!

நம் ஐமுக கண்ட சவால்கள், சாதித்த சாதனைகள் ஆகியவற்றுடன் இவ்வுலகில் யாருமே கண்டிடாத மாபெரும் பிரச்சனையான தனியாக டீ ஆத்துவதை பற்றி விரைவில் ஐடியாகிளியில் பர பர பரபரப்புத் தொடர் எழுத உள்ளார் நம் நைஜீரிய சிங்கம் ராகவன்!

வரும் 2011ல் அந்த மகா காவியத்தை புருனே சுல்தான் பிலிம்ஸ் தயாரிப்பில் இதுவரைக்கும் தயாரிப்பாளர் யாருமே கிடைக்காத நம் ஐடியா இயக்குனர் தங்கமணிபிரபு குழப்பத்தில் சாரி…, இயக்கத்தில் “காப்பியில் ஒரு டீ” என்ற பெயரில் ஒரு சரித்திர திரைப்படமாகவும் எடுக்கவுள்ளோம். அதிலும் நம் ஸ்டைல் நாயகர்கள் நைஜீரியா ராகவனும் சஞ்சய்காந்தியுமே நாயகன் & வில்லனாக நடிக்கவுள்ளனர். நாயகியராக தமிழ் திரையுலகில் முதன்முறையாக ஹாலிவுட்  சிலுக்கு - ஏஞ்சிலீனா ஜோலியும் அமெரிக்க ஷகிலா - சாண்ட்ரா புல்லக்கும் நாயகி & வில்லியாக நடிக்கவுள்ளனர்! படத்துவக்க விழாவுக்கு சினிமாவ தவிர  வேறெந்த வேலையுமே இல்லாத தமிழ் தலைவர் ஒருவர் லோட்டவில் டீயை ஆத்தி, கிளாப் அடித்து  படப்பிடிப்பை தொடங்கிவைக்கவுள்ளார்! கட்டவுட் டெண்டருக்காக நாளைக்கு காலைலயே தலைமைகழகத்தில் வந்து யாரும் குவியவேண்டாம். அந்த மாபெரும் சவாலை தலைமை கழகத்திலேயே நாங்களே சமமா பிரிச்சுகிட்டோம்!

ஐமுக ப்ளாக்குக்கு ஆளுக்கோரு ஓட்டு போட சொன்னோம், யாரொ ஒருவர் என்னுடைய ஓட்டையும் சேர்த்துப் போட்டுள்ளார்! அந்த ஐடியாவின் நேர்மையை நான் பாராட்டுகிறேன்! இப்பிடியே ஒரு கும்பலா கிளம்புனம்னா, குவாட்டரும் பிரியாணியும் கொடுக்கமலேயே செயிச்சுடமாட்டமா?

ஐமுக கர்நாடாக மாநில கமிட்டி தலைவர் முரளிதரன் கூர்க் மலையில் நமக்கு உறுப்பினர் சேர்க்க சென்ற இடத்தில் நாலு கூடை டீ இலையை லவட்டிக்கொண்டு வந்துள்ள வீரச்செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்! இந்த 4 கூடை டீ இலை 4000 டீயாக மாறும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

அடுத்த தேர்தல் கூட்டணி பற்றி நம்முடன் கலந்து பேச மிகவிரைவில்

சென்னைலர்ந்து ஸ்டாலின் வருவாக!

பீகார்லர்ந்து லாலு வருவாக!

அந்திராலர்ந்து சந்திரபாபு நாயுடு வருவாக!

பாகிஸ்தான்லர்ந்து சர்தாரி வருவாக!

அப்பிடியே

பக்கத்து ஸ்டேஷன்லர்ந்து கானுஸ்டபிளும் வருவாக!@#$%

என்பதால், யோசனைகளை கைவிட்டுவிட்டு


ஐடியா புலிகளே! வீறுகொண்டு களமிறங்குங்கள், உறுப்பினர்களை சேருங்கள்! விரைவில் நம் ஐடியா கழக மாநில மாநாடு சென்னை ஜிங்குச்சான் குப்பத்தில் நடைபெற உள்ளது! அந்த மாபெரும் தருணத்தில் நம்மோடு ஜாக்கிசானும் ஜானெட் ஜாக்சனும் மாநாட்டில் கலந்துகொண்டு நம் ஐமு கழகத்தின் ”மிகச்சிறந்த ட்ம்மி பீஸு”, ”அதிசிறந்த காமெடி பீஸு” என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விருதுகளையும் மூத்த உறுப்பினர் ஒருவருக்கு ”வாழ்நாள் டமாஷூ” விருதையும் வழங்க உள்ளார்கள்.

 

அலைகடலென வாருங்கள், ஐடியாக்களை அள்ளித்தெளியுங்கள்!


சொன்னதும் ஐடியா! செய்வதும் ஐடியா!

34 comments:

இராகவன் நைஜிரியா said...

// இவ்வுலகில் யாருமே கண்டிடாத மாபெரும் பிரச்சனையான தனியாக டீ ஆத்துவதை பற்றி விரைவில் ஐடியாகிளியில் பர பர பரபரப்புத் தொடர் எழுத உள்ளார் நம் நைஜீரிய சிங்கம் ராகவன்!//

வொய்.. வொய்யா.... வொய் திஸ் மர்டர் வெரி..

மீ லிவிங் இன் லாங் டிஸ்டன்ஸ்... யூ வாண்ட் மர்டர் மீ... நோ ... நோ.... அயம் யங் யூத் யா...

இராகவன் நைஜிரியா said...

// ஐ.மு கழகத்தின் நைஜீரியப்போர்வாள் ராகவன் //

இது மொக்கை வாள்... ஒன்னுக்கும் உதவாத வாள்..

இராகவன் நைஜிரியா said...

தமிழ் மணம், தமிழிஷ் இரண்டிலும் தலா ஒரு ஓட்டு போட்டு என்னோட இருப்பை காண்பிச்சுகிட்டேன்.

இராகவன் நைஜிரியா said...

// என இங்கே கூடியிருக்கும் கூட்டம் ஒரு ஐடியா தேரோட்டம்! //

தேர் திருவாரூர் தேரு சைசுக்கு இருக்குமா?

இராகவன் நைஜிரியா said...

// கழகத்தின் செய்திமுரசு “ஐடியாகிளி” இதழின் இணைஆசிரியர் நேசமித்தரன் //

நாலே நாலு கவிதை மட்டும் அதில் எழுதுவார்... யாரும் அர்த்தம் கேட்க கூடாது ... சொல்லிபுட்டேன்.

இராகவன் நைஜிரியா said...

// “காப்பியில் ஒரு டீ” //

பேர் சரியில்லைங்க... பேரை மாத்துங்கப்பா...

”ஒரு ரம்முடன் விஸ்கி கலக்கிறது” அப்படின்னு பேர் வைக்கணும்..

இராகவன் நைஜிரியா said...

// அதிலும் நம் ஸ்டைல் நாயகர்கள் நைஜீரியா ராகவனும் சஞ்சய்காந்தியுமே நாயகன் & வில்லனாக நடிக்கவுள்ளனர்.//

தானைத் தலைவர், வருங்கால பிரதமர், எங்கள் அண்ணன் உலக நாயகன் சஞ்சய் காந்தி அவர்களை வில்லனாக ஆக்கியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இராகவன் நைஜிரியா said...

// கட்டவுட் டெண்டருக்காக நாளைக்கு காலைலயே தலைமைகழகத்தில் வந்து யாரும் குவியவேண்டாம். அந்த மாபெரும் சவாலை தலைமை கழகத்திலேயே நாங்களே சமமா பிரிச்சுகிட்டோம்! //

நைஜிரியாவின் பங்கு ஒழுங்கா வந்திடணும். இல்லாட்டி இ-மெயில் போராட்டம் வெடிக்கும்..

இராகவன் நைஜிரியா said...

// அப்பிடியே

பக்கத்து ஸ்டேஷன்லர்ந்து கானுஸ்டபிளும் வருவாக!@#$% //

நம்ம கழக ஸ்டேசுக்கு... பக்கத்து ஸ்டேஷனில் இருந்து கமிஷனர் வருவாக என்று இருக்கணும்

இராகவன் நைஜிரியா said...

என் பங்குக்கு பின்னூட்டங்களைப் போட்டாச்சுப்பா..

இராகவன் நைஜிரியா said...

// விரைவில் நம் ஐடியா கழக மாநில மாநாடு சென்னை ஜிங்குச்சான் குப்பத்தில் நடைபெற உள்ளது! //

அவலோடு...ச்சே...ஆவலோடு எதிரி...ச்சே....எதிர் பார்க்கின்றோம்..

ஐடியா முன்னேற்ற கழகம் said...

ஒரு நாயகன் உதயமாகிறான்! பதிவு வெளியான 2 நிமிடத்தில் 11 பின்னூட்டம், 2 ஓட்டு, 5-6 ஐஎஸ்டி கால் போட்டு தான் ஒரு ஐடியா நாயகன், ஐடியா தளபதி, ஐடியா எரிமலை, ஐடியா எவரஸ்ட்டு என நிருபித்த கழக கதாநாயகன் நைஜீரிய எண்ணெய் கிணறு, நைஜீரிய டைனாசரசு, நைஜீரிய நெருப்புக்கோழி ராகவன் அண்ணாச்சி நடித்து வெளிவர இருக்கும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அளிக்கும், பின்லேடன் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் ”தீராத ஐடியா பிள்ளை” வெற்றியடைய வாழ்த்துகிறோம்!!

இராகவன் நைஜிரியா said...

// ”தீராத ஐடியா பிள்ளை” வெற்றியடைய வாழ்த்துகிறோம்!! //

ஹலோ என்னாது இது சின்னபுள்ளத்தனமா இருக்குது.

கட் அவுட், பேப்பரில் முழு பக்க விளம்பரம் எல்லாம் எங்கப்பா...

ஒரே ஒரு பின்னூட்டம் மட்டும் போட்டு வாழ்த்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

நேசமித்ரன் said...

ஆஹா நானுமா ...

நேசமித்ரன் said...

இந்த வில்லன் ஹீரோ காம்பினேஷன் ஜூப்பருங்க

நேசமித்ரன் said...

”ஒரு ரம்முடன் விஸ்கி கலக்கிறது”

அதே அதே

நேசமித்ரன் said...

“ஐடியாகிளி” இதழின் இணைஆசிரியர் நேசமித்தரன்


இதழ்னா உதடுதானே?;) லிப்ஸ்டிக் போடாம வர சொல்லுங்கப்பு

நேசமித்ரன் said...

அந்திராலர்ந்து சந்திரபாபு நாயுடு வருவாக!

விஜய சாந்தி ரோஜா எல்லாம் பழைய பாட்டிங்க புதுசா ஷெட்டி குட்டின்னு கெட்டியா எதாச்சும் துணைக்குவர சொல்லுங்க

நேசமித்ரன் said...

சென்னைலர்ந்து ஸ்டாலின் வருவாக!

பாத்திமா பாபு பாட்டிமா

சினேகா ரம்பாதான் ஒண்ணுக்குள்ள ஒண்ணாச்சே தளபதிக்கு

ஹி ஹி ஹிஹிஹி ஹி

மயில் said...

ஐமுக மகளிரணி தலைவி தியாக சொரூபம் மயிலு//

அண்ணே உங்களுக்கு தெரியுது. பய புள்ளைக புரிஞ்சுக்குதா :))

மயில் said...

ஐ.மு கழகத்தின் நைஜீரியப்போர்வாள் ராகவன்//

அண்ணே ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம டைப் பண்ணுங்க. அது வாள் இல்ல வால் :))

மயில் said...

ஐமுக புதுமாப்பிளைகள் அணி செயலர் சஞ்சய் காந்தி//

ஒரு வார்த்தை விட்டு போச்சு, அது ஐமுக வுக்கும் புது மாப்பிள்ளைகளூக்கும் இடையில் நிரந்தர போட்டுக்கணூம் :))

Sadagopal Muralidharan said...

ஆமாம். நம் கழகக்கண்மணிகளுக்காக, கூர்க் டீத்தல பறிக்கப்போனப்போ குளிருக்கு இதமாக வைன்புட்டிகள் வாங்கினதுலெ நாங்க ஆத்துனது போக மிச்சமான 20-30 புட்டியை அனூபுனொமே வந்து சேந்துச்சோ சேரலியோ சிவத்த மச்சான்..கழக உயர்வாலயத்துக்கு...

Sadagopal Muralidharan said...

அப்புறம், கழகத்தின் தொ(ல்)லைக்காட்சி பெங்களூருவிலிருந்து நமது உலகளாவிய கொள்கைபரப்புச்செயலுக்காக கடந்த மார்ச் திங்கள் மதிநிறைந்த நன்னாளில் வணக்கம் உலகம் நிகழ்ச்சியுடன் தமிழ்ஞாயிறு, இந்திய சூரியன், உச்சவின்மீன், உலகசூறாவளி - ஆகியோர் முன்னிலையில் பட்டாசு கொளுத்திப்போட்டு, (கட்டப்பஞ்சயத்து செஞ்சு மிரட்டி கூட்டிட்டுவந்ததா சொன்னதை நம்ப்பாதே தமிழினமே)தங்கு தடையின்றி நேரடி ஒளிபரப்பு சிறப்பே நடைபெற்றது என்பதை என் ரத்தத்தின் ரத்தங்களான, உடன்பிறப்புகளுக்கும், உயிரிலும் மேலான ரசிகர்களுக்கும், தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
கொசுறு: தினமும் உண்மை, உக்கார்ந்தது என்ன, இப்படிக்கு மல்லிகைப்பூ போன்ற நிகழ்சிகளில் நீலம், மஞ்சள், சிவப்பு, பச்சை (வானவில்லின் அனைத்து நிறங்களிலும்) - படங்கள், பத்திரிக்கை செய்திகள், விளக்குகள், வசனங்கள் ஒலி மற்றும் ஒளி பரப்பாகும் கூடவே க்விச்-ம் உண்டு.

க.பாலாசி said...

என்னையும் இந்த ஆட்டையில சேத்துக்குங்க....

Sadagopal Muralidharan said...

நமது கழகத்தின் தலையாய பணியான கொள்கை பரப்புதலை மிகத்தெளிவாக கீழ்க்கண்ட முகவ்ரியின் மூலமாக கற்றோரும், களிப்போரும், தவிப்போரும், நகைப்போரும், நாணுவோரும், அழுவோரும், சிரிப்போரும், ஏற்றமுறும் வண்ணம் நமது கொள்கைகளை அறியும் வகையை முயற்சித்துள்ளேன்.

http://samuraioshotamil.blogspot.com/2010/03/blog-post_31.html

பார்த்துப்பயனுறுக....

ஐடியா முன்னேற்ற கழகம் said...

நேசமித்ரன் - ஐடியாகிளி இணையாசிரியர் ஐயா அவர்களின் இதழாசையை பாராட்டி ஒரு லிப்ஸ்டிக் மற்றும் மைடப்பாவை ஐமுகழக மயிலாப்பூர் வட்ட செயலாளர் வண்ணக்கிளி பாட்டி அன்பு முத்தங்களுடன் அளிக்கிறார்

ஐடியா முன்னேற்ற கழகம் said...

மகளீரணி தலைவி மயில் அவர்கள் காலை 9மணிக்கே எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டு மத்தியானம் 1 மணிக்கெல்லம் காலை உணவை சமைத்து பிறகு 6 மணிவரை துயில்கொண்டு 12மணிவரை டிவியையோ மானிட்டரையோ(அட கம்ப்யூட்டருங்க) பார்த்தபடி மற்றெவ்வுயிருக்கும் இன்னல் விளைவிக்காத தியாக சொரூபம்தான் என்பதை இந்த வேளையில் தலைமை கழகம் அழுத்தம்திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறது! (மிஸ்டர் ராம் இப்போஎதுக்கு ஐயோ ப்சிக்குதேன்னு குரல் கொடுக்கறீங்க?)

ஐடியா முன்னேற்ற கழகம் said...

சற்றே தங்களின் இந்த அதீத கொலைவெறீயை குறைத்துக்கொள்ளுங்கள் என்று Sadagopal Muralidharanக்கு நம் தலைம கழகம் அறிவுறுத்தினாலும், சின்னம், கொடி என்கிற தங்களின் ஐடியாக்களை பாராட்டோ ஆட்டுனு ஆட்டறோம் போங்க! அதுசரி கர்நாடகால கழகத்தின் கிளையா நடத்தறீங்களா இல்ல போட்டிக்கு ஒரு மறுமலர்ச்சி கழகத்த நடத்தறீங்களா? பொதுக்குழுவுல வந்து பதில் சொல்லியே ஆகனும்! இல்லன்னா.......................................பரவால்ல விடுங்க, நம்முளுக்குள்ள எதுக்கு பிரச்சணை!(ஸ் அபா.....எஸ்கேப்புடா சாமி)

ஐடியா முன்னேற்ற கழகம் said...

க. பாலாசி, உடனடியா உங்களை ஐமுகவின் குமபகோன வெற்றிலை கொடிக்கால் வாரியத்துக்கு தலைவரா நியமிக்கிறோம். சுண்ணாம்பு வாரியத்துக்கு யாராவது மாட்டுனா சொல்லுங்க!

இராகவன் நைஜிரியா said...

தமிழ் மணத்தில் 6 ஓட்டும் தமிழிஷில் 13 ஓட்டும் 30 பின்னூட்டங்களுடன் வெற்றி நடைப் போடுகின்றது நமது கழகம் என்பதை நினைக்கும் போது...

-------------------------------

(யாரவது முடியுங்கப்பா... எனக்கு ஒரு ஜோடா ப்ளீஸ்)

மயில் said...

ஐமுகழகத்தின் கர்நாடக மாநில அமைப்பாளர் முரளிதரன்/

:)) நல்ல பதவி

Complan Surya said...

vANNAKAM

VANNAKAM

VANAKKAM..

AYYA...(IDMK)VUDAN ENGAL SANGAM

KOOTANI AMITHU POITIDA POIKIRATHU ENBATHI

MIGA THALMAIUDAN THIRIVITHUKOLKIROM..

ePPDIKU
engal anja singam,
ellam puyal...
theendatha sunamai..(konjam overthan erukko)...

varuthapadtha VAssippor sangam
Seyalalar
Complan Surya..

PInkurippu.
ungal sangam sitha sadanaikalai parrati
engal sangam sarbaga 25laks porumanam ulla
oru pattathi alithu mahilkirom

"sindanai siripi IDMK"
Valga

"sindanai siripi IDMK"
Valga


"sindanai siripi IDMK"
Valga

cheena (சீனா) said...

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கழகத்திற்கும் - அயராது உழைக்கும் கழகக் கண்மணிகளுக்கும் நல்வாழ்த்துகள்

Post a Comment

ஐடியா கழகம் உங்களுக்கு தேவையான ஐடியாக்களை அளிப்பது மட்டுமின்றி, உங்கள் மேலான ஐடியாக்களை பெரும் மரியாதையுடன் ஏற்பதை நமது கழக தீர்மானம் ஷரத்து 11ஏ தெளிவாக சொல்கிறது! எனவே உங்கள் கருத்தை, ஐடியாவை இந்த மாபெரும் சபையில் பார்வைக்கு வையுங்கள்! வருங்கால இந்தியாவுக்கு, ஆசியாவுக்கு ஏன் வருங்கால உலகத்துக்கே நம்மை விட்டால் கதி ஒன்றுமில்லை! வாருங்கள் ஐடியாக்களை அள்ளி விடுங்கள்