Sunday, 28 March 2010

வளர்ப்பு மகன் மாதிரி வளர்ப்பு அப்பா?!@#$

நமது ஐமுகவில் அரங்கு நிறைந்த உறுப்பினர் பதிவு எகிறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் வாழ்த்து சொன்ன உலகத்தலைவர்கள் யார் யார் என்கிற கேள்வியை நமது அலுவலக காவலர் ஊட்டி சுள்ளிபொறுக்கி முன்வைத்த போது நடந்த விபரீதம்தான் இந்த வளர்ப்பு அப்பா வெவகாரம்!

ஒபாமா வீட்டை விட்டு ஓடிப்போனதால் ஒயிட் ஹவுஸுக்குள் புகுந்த அப்பா புஷ்ஷும் மகன் புஷ்ஷும் ”ஹையா, இனிமேலும் நாங்கதான் ஜனாதிபதி” என்று உதார் விட, அங்கே 47D பஸ்ஸுக்கு புறப்பட்டுக்கொண்டிருந்த நம்ம விக்னேஸ்வரி இரண்டு புஷ்ஷுகள் முதுகிலும் நாலு சாத்து சாத்தி “போங்கடா, வெளியே போய் விளையாடுங்கடா” என விரட்டிவிட்டார். இதை கண்டு அசந்து போன அமெரிக்க அதிகாரிகளால் விக்கிக்கு அமெரிக்க அரசின் உயரிய விருதான “ப்ரேவ் கேர்ள் ஆப் அமெரிக்கா” வழங்கப்பட்டது. அந்த விருதை வாங்கிய நமது விக்கி, பழைய இரும்பு, ஈயம் பித்தாளைக்கு பேரிச்சம்பழம் கடையில் போட்டு லைன் டேட்ட்ஸ் வாங்கி சாப்பிட்டு விட்டு “எப்பூடி?’ என்று சொல்லி தாயகம் திரும்பினார்! விதவுட்டில் வந்த அவரை டிக்கட் பரிசோதகர்கள் நடுவானில் இறக்கிவிட்டனர் என்று ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன! வங்காளவிரிகுடா கடலில் எந்த நேரமும் சுனாமி தாக்கலாம் என எல்லா நாடுகளும் கதிகலங்கி போய் கிடக்கிறார்கள் என நமது மீனவ செய்தியாளர் துலுக்கானம் டாஸ்மாக் பாரிலிருந்து செய்தி அனுப்பியுள்ளார்!

அவர் போலவே டெல்லி திரும்பிய சஞ்சய்காந்தியை வளைத்துப்பிடித்த இந்திய உளவுப்பிரிவினர் “இவர்தான் இந்திராகாந்தியின் இளையமகன் சஞ்சய்காந்தி” என்று சோனியா காந்தியிடம் ஒப்படைக்க, அங்கு வந்த மேனகா காந்தி சஞ்சய்காந்தியை பார்த்து “ஹம் ஆப்கோ கோன் ஹை” என்கிற குடும்ப கேள்வியை கேட்க, நம்ம சஞ்சய் ஒரு குன்சாக “கயமத் சே கயாமத் தக்” என்று போட்ட பிட்டு உண்மை பதிலாக அமைந்து போனதில் சஞ்சய்க்கு உடனடி நிக்காஹ் முடிவானது. எந்தவிதமான பதட்டமுமின்றி கால் கையில் மருதானி வைத்துக்கொண்டு, பெரிய ஷர்வாணியை அணிந்து கொண்ட சஞ்சய் “ஆனது ஆகிப்போச்சு, வருன் என் புள்ளை மாதிரி” என்று  ராஜஸ்தானி தலைப்பாவையும் கேட்டு வாங்கி கட்டிகொண்டார்! ஏதேச்சையாக அங்கு வந்த சோனியாவின் ஆபிஸ் பாய் மன்மோகன்சிங்கு “அடடே, இவரு நம்ம கோவை சஞ்சய்காந்தி, நான் ரோஜா படத்துல வர்ற தீவிரவாதி மாதிரி கோவை அக்ரிகல்சர் காலேஜுல படிச்சப்ப, அங்க கோலி விளையாடிட்டிருந்த பையன்” என்று சஞ்சயின் டவுசருக்கு வந்த ஆபத்தை காப்பாற்றினார்.

மேலும் ஐமுகவில் அதிக ஐடியா கொடுப்பவர்தான் தலைவர் என்கிற புரளி நைஜீரீயா வரை பரவியதில் உஷாரான ராகவன், உடனே புருனே சுல்தானை தன் வளர்ப்பு அப்பா என அறிவித்து துபாய் அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் பலத்த வன்முறைக்கு வித்திட்டார். கார் பஸ்கள் எரிக்கப்பட்டன, நைஜீரியா ராகவன் ரசிகர் மன்றத்தினர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.  எனினும் அதைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாத ராகவன் துபாய் விவேகானந்தர் நகர், துபாய் குறுக்கு சந்தில் அமைந்துள்ள நமது ஐமுக கிளை அலுவலகத்திலிருந்து புருனே சுல்தானை தான் வளர்ப்பு தந்தையாக தத்தெடுத்ததால் சுல்தானின் சொத்து முழுவதையும் வடபழனி சாலிகிராமத்தில் உள்ள தஞ்சாவூர் யூனியன் பேங்கில் 12 % வட்டிக்கு டிபாசிட் செய்து விடவேண்டும் என சர்வதேச போலிசாரை கேட்டுக்கொண்டார். இதை கேள்விப்பட்ட புருனே சுல்தான் மாறுவேடத்தில் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் பவர்லூம் வேலைக்கு செலபவர் போல் சுற்றிக்கோண்டிருப்பதாக நமது காரணம்பேட்டை, கரடிவாவி பகுதி ஒன்றிய அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நைஜீரியா ராகவன் புருனே சுல்தானை அறிவித்த மாதிரி சஞ்சய் விரைவில் மன்மோகன்சிங் மாதிரி தலைப்பா கட்டிக்கொண்டு சிங்குக்கு ஆப்பு வைக்கக்கூடும் என மத்திய அரசு உளவு நிறுவணமான ரா அமைப்பு தெரிவித்ததை அடுத்து சிங்கு வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லக்கூடும் என பிடிஐ செய்திகுறிப்புகள் கூறினாலும் கூறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நமது மாணவரணி தலைவி பப்பு ”3வய்தை தாண்டியவர்க்கு ஓட்டுரிமை, ஹோம் ஒர்க் கொடுக்கும் மிஸ்ஸுக்கு ஸ்டேண்டப் ஆன் த பெஞ்ச் தண்டனை, முழுப்பரிட்சை வைக்கும் ஸ்கூலுக்கு உரிமம் ரத்து” என தன் ஐடியாக்களை தமிழக கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு அனுப்பியுள்ளதை தொடர்ந்து தங்கம் “ஸ்ஸூ அப்பா, இப்பவே கண்ணை கட்டுதே! பேராசிரியர் ஐயா நீங்களே கல்வி அமைச்சக பொறுப்பு எடுத்துக்கங்க சாமி” என பேராசிரியர் வீட்டு வாசலில் கதியாய் கிடப்பதாக அந்த ஏரியா கூர்க்கா ரத்தன் சிங் கூறுகிறார்!

இப்படியாக ஐமுகவின் அதிரடி வளர்ச்சியை கண்டு இந்திய, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உட்பட்ட கோபால் பல்பொடி நாடுகளுடன் தாய்லாந்து, இந்தோனேஷிய அரசுகளும் அதிர்ந்து போயுள்ளன.

29 comments:

இராகவன் நைஜிரியா said...

//அவர் போலவே டெல்லி திரும்பிய சஞ்சய்காந்தியை வளைத்துப்பிடித்த இந்திய உளவுப்பிரிவினர் “இவர்தான் இந்திராகாந்தியின் இளையமகன் சஞ்சய்காந்தி” என்று சோனியா காந்தியிடம் ஒப்படைக்க,//

அய்யோ பாவம் இந்திய உளவுப் பிரிவினர்... :-)

இராகவன் நைஜிரியா said...

அதானே... இப்பவாவது நைஜிரியா புகழ் பரவிச்சே...

நாங்கெல்லாம் டெரர்... மெயில் அனுப்பவதில் டெரர்..

இராகவன் நைஜிரியா said...

// மேலும் ஐமுகவில் அதிக ஐடியா கொடுப்பவர்தான் தலைவர் என்கிற புரளி நைஜீரீயா வரை பரவியதில் உஷாரான ராகவன்,//

அய்யய்யோ புரளியா... இது தெரியாம நேரத்த வேஸ்ட் பண்ணிட்டேனா? அவ்...அவ்...அவ்.....

இராகவன் நைஜிரியா said...

// மேலும் ஐமுகவில் அதிக ஐடியா கொடுப்பவர்தான் தலைவர் என்கிற புரளி நைஜீரீயா வரை பரவியதில் உஷாரான ராகவன் //

இது புரளியா... அய்யய்யோ நான் உண்மை என நம்பிட்டேனே... அவ்...அவ்...அவ்...

இராகவன் நைஜிரியா said...

// வங்காளவிரிகுடா கடலில் எந்த நேரமும் சுனாமி தாக்கலாம் என எல்லா நாடுகளும் கதிகலங்கி போய் கிடக்கிறார்கள் என நமது மீனவ செய்தியாளர் துலுக்கானம் டாஸ்மாக் பாரிலிருந்து செய்தி அனுப்பியுள்ளார்!//

எங்க தானைத் தலைவர், வருங்கால முதல்வரை வங்காள விரிகுடாவில் தள்ளிவிட்டது போதுதாது, அவரால் சுனாமி வரும் என்று சொல்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இராகவன் நைஜிரியா said...

// இப்படியாக ஐமுகவின் அதிரடி வளர்ச்சியை கண்டு இந்திய, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உட்பட்ட கோபால் பல்பொடி நாடுகளுடன் தாய்லாந்து, இந்தோனேஷிய அரசுகளும் அதிர்ந்து போயுள்ளன.//

இஸ்ரேல் மொசாட் செய்வது அறியாது தவிக்கின்றது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இராகவன் நைஜிரியா said...

// வளர்ப்பு மகன் மாதிரி வளர்ப்பு அப்பா?!@#$ //

@#$ - இதுக்கு என்ன அர்த்தம்?

நேசமித்ரன் said...

எங்க வலை பதிவர் சங்கத்தலைவர் ராகவன் தலைவர் அன்னவரை குறித்து எழுதியமைக்காக சங்க நிதிக்கு ராயல்டி அனுப்பி வைக்குமாறு வேண்டுகீறேன்

ஐடியா முன்னேற்ற கழகம் வாழ்க! வாழ்க!

இராகவன் நைஜிரியா said...

த.நா.ஐ.மு.க. - ஒரு இடுகைக்கும் அடுத்த இடுகைக்கும் தகுந்த இடைவெளி கொடுக்க வேண்டும். அதுவும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இடுகை போட்டால் அடுத்த இடுகை திங்கட் கிழமை வரவேண்டும்.

இதனை சட்ட முன் வடிவாக கொண்டு வரவேண்டும் என நான் முன் மொழிகிறேன். அக்கா மயில் விஜி அவர்கள் அதை வழி மொழிகின்றார்கள்.

சாம் தாத்தா said...

ரைட்டு. கலக்குறீங்களே! ஸ்ஸ்ஸ்ஸ்...
அப்பா. வந்ததுக்கு ஒரு ஓட்டை குத்திப்ட்டு ஓடிடறேன்.

கும்க்கி said...

:))

இராகவன் நைஜிரியா said...

ஓட்டு குத்துவதற்கான ஓட்டு பட்டை எங்கே...எங்கே...எங்கே..

நாங்களும் கேள்வி கேட்போமுல்ல..

இராகவன் நைஜிரியா said...

தமிழிஷ் ஓட்டு பட்டை எங்கே?

Idea said...

காலைலர்ந்து படு பயங்கரமா ட்ரை பண்ணியும் 1 தடவ அமுக்குனா 5 ஓட்டு விழறமாதிரி ஓட்டு பட்டை ரெடி பண்ண முடியலீங்க! அதான் ரெம்ப லேட்டு! ஒரு ஆளுக்கு ஒரு ஓட்டுதான்னு பழைய ஐடியாவிலேயே இந்த உலகம் வாழுது, ம்ஹூம்..... பழைய மக்கள் பழைய ஐடியா......விடுங்க, கழகத்தின் போர்வாட்களே நீங்கள் ஆளுக்கு ஒரு ஓட்டு போட்டு நமது ஐமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச்செல்லுங்கள்

Idea said...

தோ.....தமிழிஷ் & தமிழ்மண ஓட்டு பட்டைகள் வச்சாச்சுங்கண்ணா! நம்ம ஐமுக தளபதிகள் எல்லாரும் வந்து ஓட்டு போடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!!

Anonymous said...

// காவலர் ஊட்டி சுள்ளிபொறுக்கி// ஹிஹிஹிஹ் வெரி குட் :))

Anonymous said...

எந்தவிதமான பதட்டமுமின்றி கால் கையில் மருதானி வைத்துக்கொண்டு, பெரிய ஷர்வாணியை அணிந்து கொண்ட சஞ்சய் “//

நினைச்சு நினைச்சு சிரிக்கறேன் :))

Anonymous said...

ராகவன் சித்தப்பூ சொன்ன மாதிரி கழக பதிப்பு ஞாயிறு அன்று மட்டும் வெளிவராது, வாரத்தில் நான்கு முதல் ஐந்து நாட்கள் வெலிவர்ன்..

( மகளிர் அணிதலைவியின் அறிக்கையில் இருந்த்து)

Anonymous said...

தலவலி ஓ சாரி தளபதிகளே உங்க ஐடியாக்களை மெயில் மூலம் தெரியப்பத்துங்கள் :))

இராகவன் நைஜிரியா said...

என்னோட தகுதிக்கு - தமிழ் மணத்தில் ஒன்றும், தமிழிஷில் ஒன்றுமாக இரண்டு ஓட்டு போட்டாச்சுங்க..

Jeeves said...

சாப்பிடச் சொல்லி அடம்பிடிக்கும் அம்மாக்களுக்காக புது பூச்சாண்டி பொம்மையைத் தயார் செய்வதற்கு 5000 கோடி ரூபாய் ஒதுக்குமாறு ஜெயஸ்ரீ தலைமையிலான விஞ்ஞான அணி போராட்டம். அந்தப் பூச்சாண்டியைப் பார்க்கும் அம்மாக்கள் சாக்லேட் மட்டுமே குழந்தைகளுக்குத் தருவார்கள் என்று ஆராய்ச்சிக் குறிப்பில் விஞ்ஞான அணி குறிப்பிட்டு இருக்கிறது

சந்தனமுல்லை said...

:D

இராகவன் நைஜிரியா said...

// மயில் said...
எந்தவிதமான பதட்டமுமின்றி கால் கையில் மருதானி வைத்துக்கொண்டு, பெரிய ஷர்வாணியை அணிந்து கொண்ட சஞ்சய் “//

நினைச்சு நினைச்சு சிரிக்கறேன் :)) //

நனைச்சு நனைச்சு சிரிச்சது போதும்... இனிமே காயவச்சு சிரிங்க..

Anonymous said...

டீடெய்லா இருக்கு :)

க. தங்கமணி பிரபு said...

அல்லாருக்கும் நன்றி! விரைவில் பல அறிவிப்புகள் வர உள்ளன! ஐமுகவின் புகழ் உலகம் முழுக்க பரவி கட்டுக்கடங்காத கூட்டத்தில் 9 ஓட்டுகள் விழுந்துள்ளன! அதற்கு காரணமான கொள்கை தளபதிக்கு வரும் 32ஆம் தேதி சீரணி அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் தங்ககணையாழி அணிவிக்கப்படும். தயவு செய்து இரவு 12 மணிக்கு ஷ்ட்டரை பிரித்தவுடன் கமுக்கமாக காதுள்ள சம்பந்த ஜட்டி ஜிவல்லரி கடைக்குள் வந்து அளவு கொடுத்துவிட்டு போகவும்!!

ஐடியா முன்னேற்ற கழகம் said...

ஒரு முக்கியமான செய்தி ஐமுகவில் சுப்ரீம்ஸ்டார் சரத்குமார் தன் சமகவை இணைத்துக்கொள்ள ஒன்னேமுக்கால் சி தருவதாக சொல்கிறார் ஒப்புத்துகலாமா?

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மகனை வளர்க்கலாம் ,,ஆனா அப்பாவ எப்படிங்க வளர்க்கிறது??

கலக்கலான பதிவு !
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

Sadagopal Muralidharan said...

கர்னாடகாவில் நடந்து முடிந்த நகராட்சித்தேர்தலில் நமது கழகம் பெற்ற வெற்றியைத்தொடர்ந்து, எப்படி இப்படி சாத்தியமானது என்று அறிந்து அந்த வியூகத்தையே வருகின்ற சட்டமன்ற, பாராளுமன்றத்தேர்தலிலுல் புகுத்தவேண்டி நம்மிடம் பயிற்சிபெற கரைவேட்டி, கதர்வேட்டி, காக்கிஅரைக்கால்சட்டை, அரிவாள், சுத்தி, மரம்வெட்டும் கோடாலி, பம்பரம் எடுத்துக்கொண்டு, கூடவே பெட்டி பெட்டியாக சில பல கோடிகளையும், பல ஜோடி செருப்புகளையும், செஸ்னா விமானத்தையும் எடுத்துக்கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள், என்ன செய்வது என்று பொதுக்குழு கூட்டி, நல்லதொரு தீர்மானம் போடுமாறு ஒப்பாரும், மிக்காரும் இல்லா, நாளைய விடிவெள்ளி, தமிழகத்தின்/உலகளாவிய தமிழர்களின் ஒரே தலைவிதி ஐ.மு.க கர்னாடக மானிலத்தொண்டர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

cheena (சீனா) said...

பயங்கர முன்னேற்றம் - வ்சாழ்க வாழ்க - தநாஐமுக

சாம் தாத்தாவை இங்கு கண்டதில் பெரு மகிழ்ச்சி

அனைத்து உறுப்பினர்களுக்கும் நல்வாழ்த்துகள்

Post a Comment

ஐடியா கழகம் உங்களுக்கு தேவையான ஐடியாக்களை அளிப்பது மட்டுமின்றி, உங்கள் மேலான ஐடியாக்களை பெரும் மரியாதையுடன் ஏற்பதை நமது கழக தீர்மானம் ஷரத்து 11ஏ தெளிவாக சொல்கிறது! எனவே உங்கள் கருத்தை, ஐடியாவை இந்த மாபெரும் சபையில் பார்வைக்கு வையுங்கள்! வருங்கால இந்தியாவுக்கு, ஆசியாவுக்கு ஏன் வருங்கால உலகத்துக்கே நம்மை விட்டால் கதி ஒன்றுமில்லை! வாருங்கள் ஐடியாக்களை அள்ளி விடுங்கள்