Sunday, 28 March 2010

ஐடியா முன்னேற்ற கழகம் உதித்தது! உலகத்தலைவர்கள் வாழ்த்து!!

நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெறுவதாக நாங்கள் திட்டமிட்டிருந்த “தமிழ்நாடு ஐடியா முன்னேற்ற கழகத்தின் தொடக்க விழாவை சென்னை மவுண்ட் ரோடில் மேடை போட்டு 4 மணி நேரம் டிராபிக் ஜாம் செய்து நடத்துவதாக இருந்தது.

ஆனால் நமது சர்வதேச முன்னேற்ற முண்ணனி தலைவர்களில் ஒருவரான ஒபாமா அழுது அடம் பிடித்ததால் மேற்படி விழாவை வெள்ளை மாளிகையில் நடத்த வேண்டியதாயிற்று. வழக்கம் போல் லாரியில் வந்த கழக கண்மணிகளுக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து அப்படியே லாரியோடு ஃப்ளைட்டில் ஏற்றி கொண்டு போய் நியுயார்க் நகரில் இறக்கினோம். அடடா…., அங்குள்ள மக்கள அடுத்த 5 நிமிடத்தில் இடத்தை காலி செய்துகொண்டு போனவர்கள் 2 நாளாக அவரவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என உளவுத்துறை தகவல் கூறுகிறது.

தமிழ் கலச்சாரப்படி குத்து விளக்கு ஏற்ற முயற்சிக்கையில் மெழுகுவர்த்தி கிடைக்காமல் ஒரு பந்தம் கொழுத்தி பயன்படுத்தியதில் வெள்ளை மாளிகையில் உள்ள ஃபயர் அலார்ம்கள் செயல் பட்டு கட்டிடத்தின் உட்புறம் தொடர்ந்து 1 ம்ணி நேரம் மழை பெய்த்தில் நமது கழகச்சிங்கங்கள் கையோடு கொண்டுவந்த கோபால் பல்பொடியில் பல்விளக்கி, 501 பார் சோப்பில் குளித்தும் துணிகளை துவைத்தும் உலர்த்தியதில் ஒபாமாவும் என்னவென்றே புரியாமல் கலந்து கொண்டார். ஆனாலும் ஒபாமாவுக்கு கடைசிவரை கோவனம் கட்டுவது கைவரப்பெறாமலேயே போய்விட்டது!

நமது கழகத்தின் கொளகை பரப்பு செயலாளராக வருவதற்கு  3சி பேரம் பேசிய மகளிரனி செயலர் பிரச்சார பீரங்கி, செந்தமிழ் செல்வி, டாக்டர். விஜிராம் பேசும் போது அமெரிக்க கிளை கழகத்துக்கு மோனிகா லெவன்ஸ்கியை தலைவியாக போடுமாறு சொன்னது அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. லெவின்ஸ்கியெல்லாம் ஒரு ஃபிகரா என்றூ சஞ்சய்காந்தி கொழுத்திப் போட்ட தகராறை ஒபாமா பெண்டாட்டியே தீர்த்து வைத்ததில் சஞ்சய் அமைதியாகிப்போனார்.

இப்படியாக இரவு 12 வரை நீண்ட தொடக்க விழா கொண்டாட்டங்களில் எடுத்துரைக்கப்பட்ட நமது த.நா. ஐ. மு.கழக கொளகை விளக்கங்களை கேட்க முடியாத அளவு அணைவரும் மட்டை ஆகிப் போனதில அவர்களுக்காக வெள்ளை மாளிகையிலேயே கொள்கைகளை ஓசி ஜெராக்ஸ் எடுத்து கொடுக்கப்பட்டது.

பிற்பாடு, பல முக்கிய முடிவுகளை உறுப்பினர்கள் முன்மொழிய சில சட்டைகிழிப்பு, செவிலில் விழுந்த அறைகளோடு அமைதியாக பேசி முடிக்கப்பட்டது. இறுதியில் வேட்டி பறி போய் அண்டர்வாரோடு அலைந்து கொண்டிருந்த பட்டர்பிளை சூர்யாவுக்கு ஒபாமாவின் மகள் கொடுத்த பழைய பர்முடாசை காதல் சின்னமாக சூர்யா பாவிக்க, ஒரு கடுக்கன் போட்ட 7அடி கருப்பன் வந்து தான்தான் அந்த பெண்ணை கட்டிக்கொளப்போகிற மாப்பிள்ளை என்று சொன்னவுடன் அந்த ஏரியாவை காலி செய்த  சூர்யா ஒபாமா மனைவியோடு உலக சினிமா பற்றி உரையாடப்போன 1.30 மணி நேரத்தில் அந்தம்மாவுக்கு காதில் ரத்தம் வந்து ஆஸ்பித்திரி கிளம்பினார்.

மாபெரும் வெற்றிகரமாக நடந்து முடிந்து போன இந்த த.நா.ஐ. மு. கழக தொடக்கவிழாவின் பாதிப்பு அமெரிக்காவில் எதிரொலிக்கிறது. ஒபாமா ஒரு வாரத்திற்கு ஹோட்டலில் தங்கப்போவதாக சொல்லி குடும்பத்தோடு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிவிட்டார்.

நல்ல பினாயில், நம்ம ஊரு ஆசிட் என பல ஐட்டங்களை போட்டு கருப்பாகிவிட்ட வெள்ளை மாளிகையை நிறம் மாற்றும் காண்ட்ராக்ட் நமது கழகத்திற்கே கிடைத்திருப்பது மகிழ்ச்சி, ஆனால் பார்ட்டியில் நம் மக்கள் களவாண்ட 78ஸ்பூனு, 100 போர்க், ஜாம் மற்றும் சாஸ் பாட்டில்கள், எவர்சில்வர் தட்டுகள், சிகரெட் ஆஸ்டிரேக்கள் எல்லாவற்றையும் கொடுத்தால்தான் பில் பாசாகும் என்று ஒபாமா திட்டவட்டமாக சொல்லி விட்டதால், சர்வதேச கூட்டணியிலிருந்து ஒபாமாவை கழட்டி வீட்டு விடுவ்து என தீர்மணிக்கப்பட்டு அவருக்கு பதில் நமது நீண்டகால நண்பர் ஒசாமா பின்லேடனை கூட்டு சேர்த்துக்கொள்வது என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆனாலும் வெள்ளை மாளிகை பாத்ரூம் ரோல்கள், பிளாஸ்டிக் மக் ஆகியவற்றை நைசாக கொண்டு வந்த நம் மக்களின் தீரத்தைப் பற்றி பாராட்டாமல் இருக்கமுடியாது

இன்னும் எண்ணற்ற வளர்ச்சிப் ப்ணிகள் தொடங்கிவிட்டன! த.நா.ஐ.மு. கழகத்தின் வளர்ச்சி ஐ.ஆர் 8 குறுவை நெல் சாகுபடிக்கு இணையாகவும் 1MBPS ப்ராட்பேண்ட் ஸ்பீடிலும் இருக்கும் என்று இன்னும் இந்தவார ஹோம் ஒர்க்கை எழுதிமுடிக்காத கழகத்தின் மாணவரணி தலைவி பப்பு சொல்வது குறிப்பிடத்தக்கது!!

17 comments:

Saravanan said...

Nalla Karpanai. Naanum ungal kazhakathil inayalam yendru mudivedhu vitten.

Kazhaga kann manikalukku Tasmac sarakkum, Briyani pocketum maranthu vitterkal.

சதீஷ் said...

\\நம் மக்கள் களவாண்ட 78ஸ்பூனு, 100 போர்க், ஜாம் மற்றும் சாஸ் பாட்டில்கள், எவர்சில்வர் தட்டுகள், சிகரெட் ஆஸ்டிரேக்கள் எல்லாவற்றையும் கொடுத்தால்தான் பில் பாசாகும்...\\

super

ttpian said...

idea:1
encash money through eelam tamils
how to earn money by writing cinema dialogues:
Author:manjal thuntu

SanjaiGandhi™ said...

:)

விக்னேஷ்வரி said...

ஆரம்பிச்சுட்டிங்களா அலம்பலை. இது தான் சூப்பர் சங்கம். :)

மின்னுது மின்னல் said...

mmmmmmmmm

:)

natakkattum natakkattum

இராகவன் நைஜிரியா said...

த.நா. ஐ. மு.க. தொடக்கத்திற்கு என்னுடைய உளம் கனிந்த வாழ்த்துகள்.

கழகத்தில் எனக்கு பொருளாலர் பதிவு கொடுக்க இருப்பதை முன்னிட்டு, கழகத்திற்கு என்னுடைய நிபந்தனையற்ற ஆதரவு என்றென்றும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டு இருக்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

கழக வலைப்பூவில் இருந்து இந்த வேர்ட் வெரிபிகேஷனை எடுக்க வேண்டும் என்று நைஜிரியா கிளை சார்பாக பரிந்துரை செய்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

நைஜிரியாவில் இந்த கழகத்தின் தலைமையகம் அமைக்கப் போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

இது சரியா என யாராவது சொல்லுங்களேன்.

இராகவன் நைஜிரியா said...

// நமது கழகத்தின் கொளகை பரப்பு செயலாளராக வருவதற்கு 3சி பேரம் பேசிய மகளிரனி செயலர் பிரச்சார பீரங்கி, செந்தமிழ் செல்வி, டாக்டர். விஜிராம் //

யக்கா ...விஜி யக்கா... சொல்லவேயில்லை... சொல்லியிருந்தா... நைஜிரியாவில் இருந்து இரண்டு ப்ளைட் நிறைய ஆள் அனுப்பி...

அன்னை விஜிராம் வாழ்க அப்படின்னு கோஷம் போட வச்சு இருப்போமில்ல...

இராகவன் நைஜிரியா said...

பின்னூட்டங்கள் போடப் பட்ட நேரத்தில் இருந்து எத்தனை மணி நேரத்திற்குள் இடுகையில் வரும் என்று கழகத்தின் எந்த ஷரத்து தெரிவிக்கின்றது என்பதையும் தெளிவாக சொல்லும்ப்டி கேட்டுக் கொள்கிறேன்..

butterfly Surya said...

ஐடியா அருமை. கழக்கம்னு பெயர் வைத்தாலே காசு கொட்டும்.

குடும்ப நபர்களையும் சேர்த்தால் இன்னும் செழிக்கும்.

தமிழ் பிரியன் said...

;-)))

கும்க்கி said...

:))

BarathySP said...

AAtchikku vanthaa engalayum konjam kandukkongooo...

Sadagopal Muralidharan said...

ஒப்பாரும், மிக்காரும் இல்லா, தந்தையும் அண்ணனும் துவக்கிவைத்த ப(ங்)குத்தறிவு கலந்த, கதர்(கரை) வேட்டி கட்டி, சீறும் சிங்கமென, சிங்கக்கூட்டமென ஆர்ப்பரிக்கும் கடலலைக்கும் போட்டியாகும் ஐ.மு.க-வின் கொள்கைகளை கர்னாடக மானிலத்தில் பட்டி தொட்டியெங்கும், மேலும் நான் சென்று வந்த செல்லப்போகும் நாடுகளிலும் பரப்புவேன் என்று இந்தப்பதிப்பின் வாயிலாகக்கூறக் கடமைப்பட்டுள்ளேன்

cheena (சீனா) said...

அமெரிக்க நாட்டில் நடந்த துவக்க விழா நிகழ்ச்சிகள் கண்டு மகிழ்ந்தேன் - கழகம் மேன்மேலும் முன்னேற நல்வாழ்த்துகள்

Post a Comment

ஐடியா கழகம் உங்களுக்கு தேவையான ஐடியாக்களை அளிப்பது மட்டுமின்றி, உங்கள் மேலான ஐடியாக்களை பெரும் மரியாதையுடன் ஏற்பதை நமது கழக தீர்மானம் ஷரத்து 11ஏ தெளிவாக சொல்கிறது! எனவே உங்கள் கருத்தை, ஐடியாவை இந்த மாபெரும் சபையில் பார்வைக்கு வையுங்கள்! வருங்கால இந்தியாவுக்கு, ஆசியாவுக்கு ஏன் வருங்கால உலகத்துக்கே நம்மை விட்டால் கதி ஒன்றுமில்லை! வாருங்கள் ஐடியாக்களை அள்ளி விடுங்கள்